நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவசாசத்தை நீட்டிக்க தமிழக அரசு கடிதம்

கஜா புயல் காரணமாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்டர்நெட் இணைப்புகள் செயலிழந்தன. இதனால் பெரும்பாலான மாணவர்களால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவசாசத்தை நீட்டிக்க தமிழக அரசு கடிதம்
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: November 28, 2018, 11:02 PM IST
  • Share this:
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவசாசத்தை நீட்டிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

நடப்பாண்டில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கஜா புயல் காரணமாக 4 டெல்டா மாவட்டங்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், இன்டர்நெட் இணைப்புகளும் செயலிழந்தன. அப்பகுதி மக்கள் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்பதால் பெரும்பாலான மாணவர்களால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30-ம் தேதி நிறைவடையவுள்ள காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் எனக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  எனினும், வாய்ப்பு இருக்கும் மாணவர்கள் நவம்பர் 30-க்குள் விண்ணப்பித்துவிடுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.


Also watch
First published: November 28, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்