ஹோம் /நியூஸ் /கல்வி /

பிளஸ் 2 தேர்வு: ஆந்திராவின் பிடிவாதமும் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பும்!

பிளஸ் 2 தேர்வு: ஆந்திராவின் பிடிவாதமும் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பும்!

பிளஸ் 2 தேர்வு

பிளஸ் 2 தேர்வு

கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்துள்ளன. அதேவேளையில் தேர்வை நடத்தும் முடிவில் ஆந்திர அரசு உறுதியாக உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வை நடத்துவதில் ஆந்திர அரசு முனைப்புடன் உள்ள நிலையில், ஒரு உயிரிழப்பு ஏற்பட்டாலும் மாநில அரசைதான் பொறுப்பாக கருதுவோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்பட்டதையடுத்து சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதை தொடர்ந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தன.

  அதேவேளையில், ஆந்திரா மாநிலம்  12ம் வகுப்பு தேர்வை நடத்தும் முனைப்பில் உள்ளது.  ஆகஸ்ட் மாதம் தேர்வை நடத்தலாம் என்ற யோசனையில் ஆந்திரா உள்ளது. ஆந்திராவில் தேர்வுகள் நடத்தப்படும் வரை நீட்,  ஜெ.இ.இ. தேர்வுகளை நடத்த வேண்டாம் என மத்திய  கல்வியமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு ஆந்திர கல்வி அமைச்சர்  சுரேஷ் கடிதம் எழுதியிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், 12ம் வகுப்பு தேர்வு நடத்தும் ஆந்திர அரசின் முடிவை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் 12ம் வகுப்பு தேர்வை நடத்தும் முடிவில் உள்ளதாக’ ஆந்திர மாநிலத்திற்காக வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்தார்.

  அப்போது, ஒரு உயிரிழப்பு ஏற்பட்டாலும், ஆந்திர அரசைதான்பொறுப்பாக கருதுவோம் என தெரிவித்த உச்ச நீதிமன்றம், தேர்வை நடத்துவது தொடர்பாக 2 நாட்களில் இறுதி முடிவை தெரிவிக்கும்படி கூறியுள்ளது.

  இதேபோல், கேரளாவில் 12ம் வகுப்பு தேர்வு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், பதினொன்றாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய முடியாது என அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  செப்டம்பர் 6ம் தேதி தேர்வுகளை தொடங்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Andhra Pradesh, Plus 2 Examination