Home /News /education /

எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழுவிவரம்

எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழுவிவரம்

பள்ளி கல்லூரிக்கு விடுமுறை

பள்ளி கல்லூரிக்கு விடுமுறை

தமிழகத்தில் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழை முன்னெச்சரிக்கையாக சென்னை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை, அரியலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை இன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தாமதமாக செவ்வாய்கிழமையே உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    அதைத்தொடர்ந்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    சென்னை
    காஞ்சிபுரம்
    செங்கல்பட்டு
    திருவள்ளூர்
    கன்னியாகுமரி
    நெல்லை
    தூத்துக்குடி
    திருவாரூர்
    தஞ்சை
    விழுப்புரம்
    நாகை
    மயிலாடுதுறை
    கடலூர்
    விருதுநகர்
    திருப்பத்தூர்
    திருவண்ணாமலை
    தேனி
    திண்டுக்கல்
    தென்காசி
    கள்ளக்குறிச்சி

    பள்ளிகளுக்கு விடுமுறை

    ராணிப்பேட்டை
    அரியலூர்
    வேலூர்
    சேலம்
    தருமபுரி
    பெரம்பலூர்

    புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் இரு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: School Leave

    அடுத்த செய்தி