அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம்கட்ட ஆன்லைன் சிஏ வகுப்புகள் எப்போது தொடங்கும்?

வரும் நவம்பரில் CA தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவர்களுக்கு வருகிற 22-ஆம் தேதி முதல் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம்கட்ட ஆன்லைன் சிஏ வகுப்புகள் எப்போது தொடங்கும்?
மாதிரிப் படம்
  • Share this:
இந்திய பட்டய கணக்காளர் சங்கத்துடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே சி.ஏ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகின்றது. அதன்படி 22 மாணவர்கள்  கடந்த ஜூன் 10-ஆம் தேதி முதல் தங்களுடைய பயிற்சியை தொடங்கிய நிலையில், தேர்வு எழுத உள்ள மேலும் சில மாணவர்களுக்கு வருகிற 22 -ஆம் தேதி முதல் பயிற்சி தொடங்கப்பட உள்ளது .

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு  சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தென் இந்திய பட்டய கணக்காளர்  நிறுவனத்துடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச பயிற்சி வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


அதன்அடிப்படையில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளதால் நவம்பர் மாதம் தேர்வு எழுத உள்ள மேலும் சில மாணவர்களுக்கு வரும் 22 ஆம் தேதி முதல் ஆன்லைன் பயிற்சிகள் தொடங்க உள்ளது.

மேலும் படிக்க...

இந்திய-சீன ராணுவ தளபதிகளுக்கு இடையில் இன்று பேச்சுவார்த்தை..ஆம்பூரில் பைக் பறிமுதல் செய்யப்பட்டதால் இளைஞர் தீக்குளிப்பு: நடந்தது என்ன?

இதுகுறித்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து பயிற்சி பெற உள்ள மாணவர்களுக்கு குறுஞ்செய்தி சுற்றறிக்கை வாயிலாக இத்தகவலை தெரிவிக்க வேண்டும் என  சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading