Home /News /education /

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது? எதிர்பார்ப்பில் மாணவர்கள்

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது? எதிர்பார்ப்பில் மாணவர்கள்

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு

TNEA Counselling : கடந்த சில ஆண்டுகளாக என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு குறைந்து வந்த நிலையில், இந்த ஆண்டு சற்று அதிகமான மாணவர்கள் ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடைய உள்ள நிலையில் கலந்தாய்வு எப்போது எனும் கேள்வி மாணவ-மாணவிகள், பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பிற்கான ஆர்வம் மாணவர்களுக்கு மத்தியில் குறைந்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு சற்று அதிகமான மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு மேற்கொள்ளப்பட்டு, கலந்தாய்வும் ஆன்லைன் வாயிலாகவே நடந்து வருகின்றது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி தொடங்கியது.

    அதன்படி, 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 பேர் விண்ணப்பித்து உள்ளதாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்தது. விண்ணப்பப்பதிவு முடிந்த நிலையில், விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்கான முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 1ம் தேதி தொடங்கியது. இவர்களுக்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கி ழமை) கலந்தாய்வு நிறைவுபெறுகிறது.

    ALSO READ | TNEA 2022: பொறியியல் மாணவர் சேர்க்கையில் புதிய மாற்றங்கள்

    நாளை (திங்கட்கிழமை) 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. இந்த நிலையில் அடுத்தகட்டமாக எப்போது தரவரிசைப் பட் டியல் வெளியிடப்படும்?. கலந்தாய்வு எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பில் மாணவ-மாணவிகள், பெற்றோர் காத்திருக்கின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Education, Engineering, Engineering counselling

    அடுத்த செய்தி