ஹோம் /நியூஸ் /கல்வி /

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

மாதிரி படம்

மாதிரி படம்

கொரேனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்தார்.

  • News18 India
  • 1 minute read
  • Last Updated :

மலைக்கோட்டைஅருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக தலா நான்காயிரம்  ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டனார்.

இதற்கு பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஐ.சி.எம்.ஆரின் வழிக்காட்டல்கள்,மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து அதன் பின்பு தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

Also Read :  சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக வர வேண்டும் - அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக வழிக்காட்டல் வெளியிடப்பட்டுள்ளது.அதன் படி பத்து,பதினொன்று மதிப்பெண்கள் பள்ளி கல்வி துறையிடம் உள்ளது.எனவே அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எளிதானது. அந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விரைவாக அந்த மதிப்பெண்கள் வெளியிடப்படும்.

கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. மூன்றாவது அலை வரும் என சிலர் கூறுகிறார்கள்.எனவே ஐ.சி.எம்.ஆரின் வழிக்காட்டல்கள்,மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து அதன் பின்பு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

Also Read : “பிரிக்க முடியாதது எது? திமுகவும் மின்வெட்டும்!” திருவிளையாடல் பட டயலாக்கால் கிண்டலடித்த நத்தம் விஸ்வநாதன்!

இதேப்போன்று ஸ்ரீரங்கம்*அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவின்படி கொரோனா கால நிவாரண உதவியாக தலா ₹ 4  ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு  நிவாரண உதவிகளை வழங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Anbil Mahesh Poyyamozhi, School Reopen