Home /News /education /

எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை- தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டண விவரம் தெரியுமா?

எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை- தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டண விவரம் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்தியாவில் தனியார் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு ஆரம்பம் முதலே தெளிவாக திட்டமிடல் வேண்டிய அவசியம் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தியாவில் தனியார் பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகளுக்கான கல்விச் செலவு மிகவும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் 3 வயது முதல் 17 வயது வரையிலுள்ள குழந்தைகளைத் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கச் செய்வதற்கான கல்விக் கட்டணம் ஆச்சர்யப்படத்தக்க வகையில் 30 லட்ச ரூபாய் வரையில் உள்ளது என்று எக்கனாமிக் டைம்ஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    எக்கனாமிக்ஸ் டைம்ஸ் ஆய்வின்படி, 2012- 2020-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கல்விக்கான செலவு 10- 12 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கல்விக் கட்டணம் மட்டும் இதில் அடங்காது. மாறாக போக்குவரத்து செலவு, தேர்வுக் கட்டணம் ஆகியவையும் அதில் அடங்குகிறது. இந்தக் கணக்கீடு, தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

    முதல்தர நகரங்களிலுள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் 25,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை உள்ளது. பல பள்ளிகளில் ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் ஒரே பள்ளியில் படித்தால் கல்விக் கட்டணத்தில் 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விலக்கு அளிக்கின்றனர். முதல்தர நகரங்கள் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் பல பள்ளிகளில் மழலையர் வகுப்பு 60,000 ரூபாய் முதல் 1.5 லட்ச ரூபாய் வரை ஆண்டுக் கட்டணம் உள்ளது.

    பெற்றோர்கள் இருவரும் பணிக்குச் செல்லும் சூழலில், குழந்தைகள் பராமரிப்புடன் கூடிய பள்ளிகளில் குழந்தைகளுக்கான பராமரிப்பு கட்டணமாக நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் முதல் 8,500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. மழலையர் பள்ளிக்கான கல்விக் கட்டணம் 1.25 லட்ச ரூபாய் முதல் 1.75 லட்ச ரூபாயாக உள்ளது. குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கு மட்டும் பெற்றோருக்கு 5.5 லட்ச ரூபாய்வரை தேவைப்படுகிறது.

    இடைநிலைக் கல்விக்கு மாணவர்களுக்கு 1.6 லட்ச ரூபாய் முதல் 1.8 லட்ச ரூபாய் வரை தேவைப்படுகிறது. அதனால், இடை நிலைக் கல்விக்கு சுமார் 9.5 லட்ச ரூபாய் வரை தேவைப்படுகிறது. பல பள்ளிகளில் 11, 12-ம் வகுப்புகளில் மாதக் கட்டணமாக 4,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. நடுத்தர வர்க்க பெற்றோர்கள் குழந்தைகளின் கல்லூரி படிப்புக்காக இளம் வயதிலிருந்தே சேமிக்கத் தொடங்குகின்றனர். ஏனென்றால் பள்ளிக் கல்வியை விட கல்லூரி படிப்புக் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. முதல் தர தனியார் கல்லூரிகளில் பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் 4 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரை உள்ளது.

    ஜே.இ.இ போன்ற தேர்வுக்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணங்கள் 30,000 ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை உள்ளது.
    Published by:Archana R
    First published:

    Tags: Education

    அடுத்த செய்தி