• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • மருத்துவ கலந்தாய்வுக்கு முன் பொறியியல் கலந்தாய்வை நடத்துவதால் பாதிப்பு என்ன?

மருத்துவ கலந்தாய்வுக்கு முன் பொறியியல் கலந்தாய்வை நடத்துவதால் பாதிப்பு என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

இந்த ஆண்டும் பொறியியல் கலந்தாய்வை  மருத்துவ கலந்தாய்விற்கு முன்னதாகவே முடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

  • Share this:
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்விற்கு முன்கூட்டியே பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதால் இந்த ஆண்டும் பல பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் காலியாக இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்விற்கு பிறகு மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுகின்ற போது பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் தாங்கள். தேர்ந்தெடுக்கும் இடங்களை விடுத்து மருத்துவப் படிப்பில் இடங்கள் கிடைக்கின்ற போது அதில் சேர்ந்து விடுகின்றனர். இதன் காரணமாக பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருக்கும் நிலை ஏற்படுகிறது.

Also Read : முன்னாள் காக்கியும், இந்நாள் சங்கியுமான அண்ணாமலை - நிர்வாகியின் பேச்சால் அதிர்ந்த பா.ஜ.க-வினர்
 உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காலியாக இருக்கும் இடங்களை இடையில் நிரப்ப கூடாது என்பதால் தமிழகத்தில் உள்ள தலை சிறந்த கல்லூரிகளான, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரிகளில் மாணவர்கள் வெளியேறும் அந்த இடங்கள் அடுத்த 4 ஆண்டுகள்  காலியாக இருக்கும்.


தற்போது அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பிஇபிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வினை  செப்டம்பர் 30ம் தேதிக்கு முன்னதாக முடிக்க வேண்டும் என்றும் 2-ம் கட்ட கலந்தாய்வை அக்டோபர் 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 25 ம் தேதி முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Also Read : திகார் சிறையில் பெண் கைதிகளுக்கான கழிவறையில் கதவுகள் இல்லை

இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டும் பொறியியல் கலந்தாய்வை  மருத்துவ கலந்தாய்விற்கு முன்னதாகவே முடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் காலியாக இருக்கும்.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் கல்வியாளர்கள் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் தேசிய தேர்வு முகமை  ஆகிய இரு அமைப்புகளும் கலந்து பேசி இதற்கு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: