Home /News /education /

நியூஸ்18 வகுப்பறை: பட்டுப்பாதை என்றால் என்ன?

நியூஸ்18 வகுப்பறை: பட்டுப்பாதை என்றால் என்ன?

ஐரோப்பாவின் ரோம், மேற்காசியாவின் பாரசீகர்கள், இந்தியாவின் வட  பகுதியில் ஆட்சி செய்த  குஷான் இந்த பட்டுப்பாதை வணிகத்தினால் அதிகம் பயனடைந்ததாக கூறப்படுகிறது

ஐரோப்பாவின் ரோம், மேற்காசியாவின் பாரசீகர்கள், இந்தியாவின் வட  பகுதியில் ஆட்சி செய்த  குஷான் இந்த பட்டுப்பாதை வணிகத்தினால் அதிகம் பயனடைந்ததாக கூறப்படுகிறது

ஐரோப்பாவின் ரோம், மேற்காசியாவின் பாரசீகர்கள், இந்தியாவின் வட  பகுதியில் ஆட்சி செய்த  குஷான் இந்த பட்டுப்பாதை வணிகத்தினால் அதிகம் பயனடைந்ததாக கூறப்படுகிறது

    மாணவர்கள் பயன்படும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளை நியூஸ் 18 வகுப்பறை என்ற சிறப்பு தொகுப்பில் விவரித்து வருகிறோம். அந்த வகையில், இன்று பட்டுப்பாதை என்றால் என்ன ? வரலாற்றின் அதன் முக்கியதத்துவம் என்ன என்பதை இங்கே காண்போம்

    பட்டுப்பாதை என்றால் என்ன?  கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிலிருந்தே, சீனா மிகப்பெரிய வர்த்தக மையமாக இருந்தது. சீனப்பட்டு மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான, மதிப்புமிக்க பொருளாக காணப்பட்டது. பட்டுப்புழு வளர்ச்சி பற்றியும், பட்டுத்துணிகள் இருந்தும் அறிந்து வைத்த சீனர்கள், அதன் ரகசியத்தை வெகு காலமாக காத்து வந்தனர்.

    நியூஸ்18 வகுப்பறை: மக்களாட்சிக்கும், குடியரசுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

    கி.மு முதலாவது நூற்றாண்டில் சின் அரசமரபு காலத்தின் போது, சீனாவின் வர்த்தகம் மற்றும் ராஜதந்திரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டது.  இந்த காலகட்டத்தில் தான், சீனாவில் இருந்து ரோம் ராஜ்யத்துடன் சாலையில் இணைக்கும் பட்டுச் சாலை உருவாக்கப்பட்டதாக தொல்லியல்  வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வணிகத்தைத் தாண்டி மத்திய ஆசியா, தெற்காசியா, மேற்காசியா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் சீனாவை இணைக்கும் காலாச்சார பாதையாகவும் இவை விளங்கின. 

    இந்த பட்டுப்பாதை நெடுகிலும் பல்வேறு சிக்கலான சாலைகள் நிரம்பியிருந்தன. கோபி பாலைவனம், பாமிர் மலைகள், இமாலய மலைத் தொடர்கள் போன்ற சவாலான  சாலைகளை வர்த்தகர்கள் கடக்க வேண்டும். சாலை நெடுகே ஆட்சி செய்த பேரரசுகள் இந்த சாலைகளை சீரமைத்து மேம்படுத்தின. மேலும், தங்கள் தேச எல்லைக்குள் வரும் சாலைகளைப் பயன்படுத்த தேவையான  கூடுதல் கட்டணங்களையும் விதித்தன.            

    ஐரோப்பாவின் ரோம், மேற்காசியாவின் பாரசீகர்கள், இந்தியாவின் வட  பகுதியில் ஆட்சி செய்த  குஷான் இந்த பட்டுப்பாதை வணிகத்தினால் அதிகம் பயனடைந்ததாக கூறப்படுகிறது. இந்த பட்டுப்பாதைகளை கட்டுப்படுத்துவன் மூலம் தங்கள் அதிகாரத் தன்மையை நிலை நிறுத்தியாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றன.



    பட்டுப் பாதை ஏன் வீழ்ச்சி அடைந்தது? பட்டுப் பாதையினால், பொருள் வர்த்தகத்தோடு, பண்பாட்டுத் தொடர்பும் விறுவிறுப்பாக நடைபெற்றது.  இந்த பட்டுப்பாதையின் மூலம் தான் சீனிவாவுக்குள்  பௌத்த மதம் பரவியதாக கூறப்படுகிறது.

    இதன் வீழ்ச்சிக்கு பல்வேறு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.   இந்த பட்டுப்பாதை மூலம் தான்  சின்னம்மை நோய்த் தொற்று பரவியதாக கூறப்படுகிறது. சீனாவில் இருந்து அயல் நாட்டிற்கு குடியேறிவர்கள் மூலம் பட்டு நெய்தல் குறித்த ரகசியங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு பரவியது. மேலும், சில வணிகர்கள் சீனாவில் இருந்து பட்டுப்புழு மூட்டைகளை கடத்தின போது சீனாவில் பட்டின் ஏகபோகம் முடிவுற்றது. 6ம் நூற்றாண்டில் சீனா - அரபு வர்த்தகர்கள் நெருக்கம் காரணமாக, சீனாவுடன் வர்த்தகம் செய்வதற்கான ஐரோப்பாவின் ஆர்வம் கணிசமாக குறையத் தொடங்கியது.

    9வது நூற்றாண்டுக்குப் பின், ஐரோப்பியா, ஆசியாவில் ஏற்பட்ட அரசியல்-பொருளாதார மாற்றங்களினால், கடல் போக்குவரத்து வளர்ச்சி பெற்று, வர்த்தகத்தில் கடல் போக்குவரத்து முக்கிய இடம் வகித்தது. இதன் காரணமாக, தரை வழி வணிகப் பாதை படிப்படியாக வீழ்ச்சியடைந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.   

    21ம் நூற்றாண்டின் கடல்சார் பட்டுப்பாதைத் திட்டம்: 

    கடந்த 2013ம் ஆண்டு, வரலாற்று ரீதியான பட்டுப்பாதை ஒத்துழைப்புகளை விருத்தி செய்வதற்கான, Belt and Road Initiative என்ற திட்டத்தை சீனா அறிவித்தது.இத்திட்டத்தின்  மூலம் உலகின் கரையோர நகரங்கள் ஒன்றிணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகுறிது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: China

    அடுத்த செய்தி