மோடி உரையாடும் பரிக்ஷா பி சார்சா கருத்தரங்கம்: 2000 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

மோடி உரையாடும் பரிக்ஷா பி சார்சா கருத்தரங்கம்: 2000 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
மோடி
  • Share this:
பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசும் டெல்லியில் நடைபெறும் பரிக்ஷா பி சார்சா(Pariksha Pe Charcha) 2020 நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 2000 மாணவர்கள் வரை கலந்துகொள்கின்றனர்.

பிரதமர் மோடி, 2018-ம் ஆண்டு ’எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்தில் பள்ளி மாணவர்கள் எப்படி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று விளக்கியிருந்தார். இந்தநிலையில், பள்ளி இறுதித்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, நாளை காலை 11 மணிக்கு உரையாட உள்ளார்.

டெல்லியிலுள்ள டால்காட்டோரா என்ற என்ற அரங்கத்தில் பரிக்ஷா பி சார்சா 2020 என்ற பெயரில் நடைபெறும் இந்த கருத்தரங்கத்தில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து 2000 பள்ளி மாணவர்கள் வரை கலந்துகொள்வார்கள். இந்த 2000 மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.


அதிகபட்சமாக 1,500 எழுத்துகளுக்கு மிகாமல் அந்த கட்டுரை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், 9-12 வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சுமார், 2.6 லட்சம் மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டார்கள் என்றும் அவர்களில், 2000 பேர்வரை தேர்ந்தெடுக்கபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த கருத்தரங்கு பொங்கல் பண்டிகையின் காரணமாக 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடி இந்த பரிக்ஷா பி சார்சா என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டுவருகிறார்.

Also see:
First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்