ஆசிரியர் தகுதி தேர்வில் 1 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சிக்கு காரணம் என்ன?

Web Desk | news18-tamil
Updated: August 21, 2019, 10:30 PM IST
ஆசிரியர் தகுதி தேர்வில் 1 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சிக்கு காரணம் என்ன?
ஆசிரியர் தேர்வு (கோப்பு படம்)
Web Desk | news18-tamil
Updated: August 21, 2019, 10:30 PM IST
ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானோர் தேர்ச்சி பெற்றதற்கு, தரம் குறைந்துவிட்டதே காரணம் என கல்வியாளர்கள் கூறும் நிலையில், 2012ல் நடத்தப்பட்டதுபோல மறு தேர்வை நடத்தலாம் என ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மட்டுமன்றி தனியார் பள்ளிகளிலும் ஆசிரியராக பணிபுரிய, டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது.

1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், 8ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2ஆம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. இந்த வகையில், நடப்பாண்டில் 150 மதிப்பெண்ணுக்கு நடைபெற்ற டெட் முதல் தாள் தேர்வில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் தேர்வு எழுதினர்.


அதில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் பிரிவினர் தேர்ச்சி பெறுவதற்கு 82 மதிப்பெண்ணும் பொதுப்பிரிவினர் தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டது .

அதில், ஒரு சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறாமல், வெறும் 482 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.  150 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில், அதிகபட்சமாக ஒரே ஒரு தேர்வர் மட்டுமே 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். குறிப்பாக, 80 மதிப்பெண்களுக்கு மேல் 843 பேரும், 90 மதிப்பெண்களுக்கு மேல் 72 பேரும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், டெட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருப்பது ஒருபுறம் இருந்தாலும், ஆசிரியர்களின் தரமும் குறைந்திருப்பதை இது காட்டுவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், ஆசிரியர்களின் தரம் குறையவில்லை என்றும், ஆசிரியர்களுக்கு, மீண்டும் டெட் தேர்வு நடத்தலாம் என்றும் பயிற்சி மையங்களின் கூட்டமைப்பை சேர்ந்த நடராஜ் சுப்ரமணியன் கூறியுள்ளார்.

Loading...

இதனிடையே, டெட் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு உடனடியாக அரசுப் பணி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Also Watch

First published: August 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...