Home /News /education /

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும்?

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும்?

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த ஜனவரி 17-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு ஏப்ரல் 16-ம் தேதி வரை 90 நாட்கள் வகுப்புகள் நடைபெற்றுள்ளது.

  • News18
  • Last Updated :
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும் அதற்கான சாத்தியங்கள் என்ன.

சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்துள்ள மத்திய அரசு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆராய ஒரு வல்லுநர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று தமிழக அரசும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ள நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து கல்வியாளர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கொண்ட குழு மதிப்பெண் வழங்கும் முறையை அரசுக்கு பரிந்துரைக்கும் என்று அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த ஜனவரி 17-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு ஏப்ரல் 16-ம் தேதி வரை 90 நாட்கள் வகுப்புகள் நடைபெற்றுள்ளது. இதில் 5 பாடங்களுக்கும் சேர்த்து ஒரு அலகுத் தேர்வு மற்றும் ஒரு முழு திருப்புதல் அரசுப்பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் ஓராண்டிற்கு மேலாக ஆன்-லைன் வழியில் அவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் தங்கள் மாணவர்களுக்கு பாடவாரியாக தொடர்ச்சியாக தேர்வுகளை நடத்தி மதிப்பெண் வழங்கியிருக்கின்றனர். அதேபோன்று இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளும் முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அரசு அமைத்துள்ள குழு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி மதிப்பெண் வழங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Also read... 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது: ராமதாஸ்

அதன்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கணக்கீடு செய்து 12-ம் வகுப்பு மதிப்பெண் வழங்க வாய்ப்புள்ளது.

10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை கொண்டு இந்த ஆண்டு மட்டும் சதவிகிதம் அல்லது கிரேடு முறையில் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

இந்த ஆண்டு மாணவர்களுக்கு நடைபெற்ற திருப்புதல் தேர்வு மற்றும் அலகுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிட்டு வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: 12th exam, TN Govt

அடுத்த செய்தி