மேற்கு வங்கத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

மேற்கு வங்கத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: May 21, 2019, 10:23 AM IST
  • Share this:
மேற்கு வங்க மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 85.49 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் அம்மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், 85.49 சதவிகித மாணவ - மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வு முடிவுகளை மேற்கு வங்க கல்வி வாரியத்தின் இணையதளமான wbresults.nic.in.என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை கொடுத்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.


மேலும், examresults.net, indiaresults.com ஆகிய இரண்டு இணையதளங்களிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பெறலாம். 56263 என்ற எண்ணுக்கு பதிவு எண்ணை RESULTOR<10Roll number> என்ற வடிவத்தில் அனுப்பி பெறலாம்.

சுமார் 9.23 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர்.
First published: May 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்