• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • VITEEE Results : வெளியானது VITEEE முடிவுகள் - VIT நிறுவனத்தில் சேர வழிமுறைகள் இதோ!

VITEEE Results : வெளியானது VITEEE முடிவுகள் - VIT நிறுவனத்தில் சேர வழிமுறைகள் இதோ!

தேர்வில் தேர்ச்சிபெற்றோர் கலந்தாய்வில் பங்கேற்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

  • Share this:
முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (VIT), பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான (VITEEE) முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான vit.ac.in-ல் அறிவித்துள்ளது. இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வேலூர், சென்னை, ஆந்திரா மற்றும் போபாலில் உள்ள VIT வளாகங்களில் B.Tech படிப்பில் சேர தகுதி பெறுவார்கள். தேர்வில் தேர்ச்சிபெற்றோர் கலந்தாய்வில் பங்கேற்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கலந்தாய்வில் பங்கேற்க நீங்கள் தகுதிபெற்றவரா என்பதை முதலில் அறிய வேண்டும். மேலும், மே 28, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளில் remote proctored-ல் நடைபெற்ற VITEEE-க்கான முடிவுகளை vit.ac.in-ல் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலில், vit.ac.in-ன் சென்று முகப்பில் இருக்கும் ரிசல்ட் லிங்க்கை கிளிக் செய்யுங்கள்

புதிய பக்கம் ஒன்று திறக்கும். உங்கள் விவரங்களை கொடுத்து login செய்தால் தரவரிசைப் பட்டியல் இடம்பெற்றிருக்கும்.

நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் வளாகம், படிப்பு ஆகியவற்றை தேர்வு செய்யுங்கள். உங்கள் தரவரிசை எண் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுத்த வளாகம் உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும்.

மேலும், இதுகுறித்து VIT நிறுவனம் கூறுகையில், தேர்வானவர்கள் முழு கட்டணம் செலுத்திய பிறகு ஆன்லைனில் அல்லது நிறுவனத்திலேயே வகுப்புகள் தொடங்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: