கால்நடை மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 480 இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 72 இடங்கள் போக, மீதமுள்ள 408 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இந்த கால்நடை மருத்துவப் படிப்பின் பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், இளநிலை கால்நடை மருத்துவம், b.tech பால்வள தொழில்நுட்ப படிப்பு உள்ளிட்டவற்றில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித சிறப்பு இடஒதுக்கீட்டு பிரிவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கால்நடை மருத்துவப் படிப்பு தர வரிசையில் முதல் 5 இடங்களை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களே பிடித்துள்ளனர்.
அந்தவகையில் இளநிலை கால்நடை மருத்துவபடிப்பிற்கான தரவரிசையில் முதல் 5 இடங்களை மேற்கு மாவட்டங்களான திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களே இடம்பிடித்துள்ளனர்.
பாஜக வெளிநடப்பு... நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றியதாக கூறுவது தவறு - நயினார் நாகேந்திரன்
அந்த வகையில் தரவரிசையில் முதலிடத்தில் 193.4 கட் ஆப் மதிப்பெண்ணுடன் திருப்பூர் மாணவி பிரியா, இரண்டாம் இடத்தை 193.3 கட் ஆப் மதிப்பெண்ணுடன் தருமபுரி மாணவி பவித்ராவும், மூன்றாம் இடத்தை 192 மதிப்பெண்களுடன் நாமக்கல் மாணவர் தீபாகுமார் ஆகியோரும் பிடித்துள்ளனர்.
நான்காம் இடத்தையும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கனிதாரனும், ஐந்தாம் இடத்தை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுவேதாவும் பிடித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.