ஹோம் /நியூஸ் /கல்வி /

அம்பேத்கர், அப்துல்கலாம் எந்த வர்ணத்தை சார்ந்தவர்கள்? பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற கேள்வியால் மீண்டும் சர்ச்சை!

அம்பேத்கர், அப்துல்கலாம் எந்த வர்ணத்தை சார்ந்தவர்கள்? பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற கேள்வியால் மீண்டும் சர்ச்சை!

அம்பேத்கர் - அப்துல்கலாம்

அம்பேத்கர் - அப்துல்கலாம்

வர்ணத்தின் அடிப்படையில் அம்பேத்கர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்டோர் எந்த வர்ணத்தை சேர்ந்தவர்கள் என்கிற கேள்வி பாடப்புத்தகத்தில் கேட்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அம்பேத்கர், அப்துல் கலாம் எந்த வர்ணத்தை சார்ந்தவர்கள்? என்ற சர்ச்சைக்குரிய கேள்வி சென்னை சின்மயா மிஷன் தயாரித்துள்ள புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்து மத அமைப்பான சின்மயா மிஷன் என்கிற அமைப்பு நாடு முழுவதும் ஏராளமான கல்வி நிலையங்களை நடத்தி வருகிறது. அத்துடன் பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களையும், தயாரித்து வழங்குகிறது.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி சின்மயா மிஷன் தயாரித்துள்ள புத்தகங்களை பயன்படுத்துகிறது. அந்த வகையில் சின்மயா மிஷன் தயாரித்துள்ள 6ம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில், மனிதர்கள் அவர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் பிராமணர்கள் ,சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எனும் 4வகையாக பிரிக்கப்பட்டுள்ளதாக பாடப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரிக்கப்பட்ட வர்ணத்தின் அடிப்படையில் அம்பேத்கர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்டோர் எந்த வர்ணத்தை சேர்ந்தவர்கள் என்கிற கேள்வி பாடப்புத்தகத்தில் கேட்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கஏ.கே ராஜன் குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனு: தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

சின்மயா மிசன் அமைப்பு 6 ம் வகுப்பு வரலாற்று புத்தகத்திற்கு 'ரேடியன்ட் பாரத்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சமத்துவத்தை பயில வேண்டிய வயதில் இளம் சிறார்கள் மனதில் வர்ணாசிரமத்தை தொகுத்து அதனடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Published by:Salanraj R
First published:

Tags: Ambedkar, APJ Abdul Kalam, Caste, Department of School Education