விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் அமைந்திருக்கும் அரசு மாதிரி பள்ளி மாணவர்களில் 12 பேருக்கு நீட் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டது. நடப்பாண்டில் தமிழ்நாட்டிலிருந்து 1,32,167 மாணவர்கள் நீட் தேர்வு தேர்வெழுதிய நிலையில், 51.20% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
இதில், குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருப்பதாகவும், மருத்துவ சேர்க்கைக்கு போதிய மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை வெறும் 3 என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வில் 7.5 சதவீத முன்னுரிமை இடங்களில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற பிருந்தா என்ற மாணவியை விசிக எம்பி ரவிக்குமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் குறிப்பில், "விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் அமைந்திருக்கும் அரசு மாதிரி பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 78 மாணவர்களில் 54 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால் அதில் 12 பேர் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரையும் மற்ற மாணவர்களையும் சந்தித்து பாராட்டுகளைத் தெரிவித்தேன். மாணவர்கள் அமர்வதற்கு பெஞ்ச் மற்றும் மேசைகள் வழங்குவதாக அறிவித்தேன். pic.twitter.com/uKaQLZBtpW
— Dr D.Ravikumar M P (@WriterRavikumar) September 10, 2022
மேலும் கூறிய அவர், இந்தப் பள்ளியில்’ பயின்ற பிருந்தா என்ற மாணவி நீட் தேர்வில் 467 மதிப்பெண்கள் பெற்று 7.5 சதவீத முன்னுரிமை இடங்களில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த பள்ளியில் இருந்து மட்டும் 9 மாணவர்கள் 7.5 முன்னுரிமை இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு தேதி மாற்றம்
7.5% ஒதுக்கீட்டில் மாநிலத்தின் முதல் மாணவியாக வந்த பிருந்தா மற்றும் சக மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டுகளைத் தெரிவித்த அவர், மாணவர்கள் அமர்வதற்கு பெஞ்ச் மற்றும் மேசைகள் வழங்குவதாக அறிவித்தார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Neet, Neet Exam, NEET Result