10ஆம் வகுப்பு தேர்வு குறித்தும் அதற்காக நாளை திமுக நடத்தும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க மதிமுக தலைவர் வைகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா பெரும் பாதிப்பு உள்ள தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்தக் கூடாது என்ற திமுக தலைமையிலான அறப்போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தோழர்கள் பங்கேற்குமாறு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
“ஒன்பதரை இலட்சம் மாணவர்கள், மூன்று இலட்சம் ஆசிரியர்கள் உயிரோடு விளையாட வேண்டாம். தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கும் அபாயத்தை ஏற்படுத்தாதீர்கள்” என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உணர்ச்சியோடும், உருக்கத்தோடும் நீதிமன்றத்திலேயே கூறி இருக்கிறார்கள்.
எனவே தமிழ்நாடு அரசு, கண் கெட்ட பிறகு சூரிய வழிபாட்டுக்குத் தயாராகாமல், தான் எடுத்த முடிவு என்ற ஆணவத்திற்கும், அகந்தைக்கும் இடம் கொடுக்காமல் மக்கள் நலனே ஆட்சியின் இலக்கு என்ற உணர்வோடு, 15-ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 10-ம் வகுப்புக்கானப் பொதுத் தேர்வை உடனடியாக இரத்துச் செய்து, அறிவிக்க வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், கூட்டணி தலைமை எடுத்த முடிவின்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சமூக விலகலைக் கடைப்பிடித்து, கழகக் கண்மணிகள் கையில் கழகக் கொடிகளேடும், கருப்புக் கொடிகளோடும், நாளை 10 ஆம் தேதி காலை 10 மணி அளவில், ஆர்ப்பாட்டப் போர் முழக்கம் எழுப்ப அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க...
ரத்தை நோக்கிச் செல்லும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு? அரசு ஆலோசிப்பது என்னென்ன?
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.