• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலி இடங்கள் இருந்தால் ஓபிசி மாணவர்கள் மூலம் நிரப்பலாம்: உயர்கல்வித்துறை

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலி இடங்கள் இருந்தால் ஓபிசி மாணவர்கள் மூலம் நிரப்பலாம்: உயர்கல்வித்துறை

வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால், அதை இதர பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

  • Share this:
    இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு பிரிவில் ஏற்படும் காலியிடங்களை மற்றோர் பிரிவினர் மூலம் சுழற்சி முறையில் நிரப்பலாம். இதற்கு அரசு அனுமதி அளிக்கிறது. தென்மாவட்டங்களில் 10.5% இட ஒதுக்கீடு இடங்கள் காலியாக இருந்த நிலையில், அதை இதர பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் காலி இடங்களில் மறு ஒதுக்கீடு செய்யப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 7 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட இதர பிரிவுகளுக்கு 2.5 சதவீதமும் மொத்தம் 20 சதவீதம் பிரித்து கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையான கல்வி நிறுவனங்களில் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டில் அதிகமாக மாணவர்கள் இல்லாத தகவல் வந்ததின் அடிப்படையில் இந்த காலி இடங்களை மற்ற எம்பிசி மாணவர்களுக்கு பிரித்து கொடுப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு, சீர் மரபினர் பிரிவில் காலியிடங்கள் இருப்பின், அதை வன்னியர்களை கொண்டு நிரப்பிட ஏதுவாகவும் திருத்தம் செய்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: