Home /News /education /

UPSC SERIES 1: பருவநிலை மாற்றம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்

UPSC SERIES 1: பருவநிலை மாற்றம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்

UPSC :  தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த சிறப்புத் தொடர் இருக்கும் என்று நம்புகிறோம்.

UPSC : தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த சிறப்புத் தொடர் இருக்கும் என்று நம்புகிறோம்.

UPSC : தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த சிறப்புத் தொடர் இருக்கும் என்று நம்புகிறோம்.

மேலும் படிக்கவும் ...
    ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல்நிலை தேர்விலும்,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 முதல் நிலைத் தேர்விலும் சுழல் மாசு, பருவநிலை மாற்றம், பல்லுயிர் சமநிலை, புதுப்பக்கத்தக்க எரிசக்தி  போன்ற தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறுகின்றன.

    தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த சிறப்புத் தொடர் இருக்கும் என்று நம்புகிறோம்.

    ஐபிசிசி ஆறாவது  மதிப்பீட்டு அறிக்கை:  

    பருவநிலை மாற்றத்துக்கான அரசாங்களுக்கு இடையேயான குழு (IPCC) சில வருட இடைவெளியில் பருவநிலை தொடர்பான அறிக்கைகளை வெளியிடுகிறது.

    கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், தனது  ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையில் (பணிக்குழு 1 காலநிலை மாற்றத்தின் இயற்பியல் அறிவியல் அடிப்படை (Climate Change 2021 : The Physical Science) பருவநிலை மாற்றம் அதனால் ஏற்படக்கூடும் பேராபத்து குறித்து எச்சரித்தது. இந்தியா உள்ளிட்ட பெருமபாலான உலக நாடுகள் இந்த அறிக்கை மிகுந்த நம்பகமான தன்மை கொண்டவை என்று நம்புகின்றன.

    2வது பணிக்குழுவின் அறிக்கை 2022 பிப்ரவரி மாதத்திலும், மூன்றாவது பணிக்குழுவின் அறிக்கை 2022, ஏப்ரல் நான்காம் தேதியிலும் வெளியாகின. ஆறாவது மதிப்பீட்டின் சிறப்பு இறுதி (Synthesis Report)  வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

    முக்கிய அம்சங்கள்: கடந்த 2000 ஆண்டுகளில் பூமியின்  வெப்பநிலை அதிகரித்துள்ளது. பூமி சூடேறி வருவது என்பதும், இததற்கு மனித செயல்பாடுகள் தான் மூல காரணம் என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை என்று அறிக்கை தெரிவித்தது.



    கடந்த நான்கு தசாப்தங்களாக ஒவ்வொன்றும் பத்தாண்டும் அதற்கு முந்தைய பத்தாண்டுகளை விட வெப்பம் அதிகமாக இருந்த பத்தாண்டுகளாகும். அதாவது, 2010- 2020 வரையிலான பத்தாண்டுகள் அதற்கு முந்தைய பத்தாண்டுகளை விட உலகம் முழுவதும் வெப்பம் அதிகமாக இருந்த பத்தாண்டுகளாகும்.

    முக்கிய காரணம் கார்பன் வெளியேற்றம்: 



    காற்றின் மண்டலத்தில் கரிகாற்று, மீத்தேன் வாயு, ஓசோன், நைட்ரஸ் ஆக்சைடு, Fluorinated Gas ஆகிய பசுமை இல்ல வாயுக்கள் (Green House Gases) அளவு அதிகரிக்கும் போது பூமியின் சராசரி அளவு அதிகமாகிறது. இந்த, குறிப்பிட்ட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் ஆண்டுகளாக வளிமண்டலத்தில் கரிக்காற்றின் அளவு (Co2) 300 ppm என்ற அளவைத்தாண்டாமலேயே இருந்து வந்தது. 1950ஆம் ஆண்டு முதல் இந்த அளவு தொடர்ந்து அதிகரித்தது. தற்போது 419 ppm ஆக மாறிவிட்டது. வளிமண்டலத்தில் கரிக்காற்று கலந்து வரும் வேகம் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது. தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு தொழிற்சாலைகளும் வாகனங்களும் பெரும் புகையை வெளியேற்றியதே இதற்கு முக்கிய   காரணம். எனவே, இந்த பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 1992ம் ஆண்டு யுஎன்எப்சிசி தொடங்கப்பட்டது. இது பருவநிலை மாற்றத்திற்கான ஐ.நாவின் கட்டமைப்பாகும்.



    பருவநிலை நீதி: 

    உலகிலேயே அதிகமான அளவுக்கு கார்பன் வெளியேற்றும் தேசம் சீனா. அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், ஐரோப்பிய யூனியன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.

    ஆனால், உலக மக்கள் தொகையில் 24 விழுக்காடு கொண்ட சீன  தேசம் 30% கார்பனை  வெளியேற்றுகின்றன. அதேபோன்று, உலக மக்கள் தொகையில் 17 விழுக்காடு கொண்ட இந்தியா வெறும் 7% கரிகாற்றை வெளியேற்றுகின்றன. ஆனால், உலக மக்கள் தொகையில் 5 %க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா 15% வெளியேற்றுகின்றன. அதாவது, சராசரி இந்தியரை விட அமெரிக்காவில் வாழும் தனிமனிதர் ஏழு மடங்கு அதிகமாக கரிகாற்றை வெளியேற்றுகிறார். எனவே, பருவநிலை நீதி என்ற கோட்பாடை இந்தியா போன்ற வளரும் நாடுகள் முன்வைக்கின்றன.  சுற்றுச்சூழலுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள்தான் அதற்காக அதிக அளவிலான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

    TNPSC Current Affairs: பொது அறிவுப் பிரிவில் மதிப்பெண் பெறுவது எப்படி?

    இங்கே, இங்கே ஆக்கப்பூர்வமான விவாதங்கள்  தேவைப்படுகிறது. ஏழ்மை மற்றும் வளர்ந்து வரும்  நாடுகளின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழல்களை மையமாக வைத்துதான் காலநிலை மாற்றம்  தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதற்காகத் தான், ஐ.நாவின் கீழ் பருவநிலை தொடர்பான கட்டமைப்பை உலகநாடுகள் உருவாக்கின.

    யுஎன்எப்சிசி மற்றும் பாரிஸ் ஒப்பந்தம்: 

    யுஎன்எப்சிசி-ன் (UNFCC) கீழ், சிஒபி (Conference of parties) என்ற அனைத்து தரப்பினருக்கமான மாநாடு நடத்தப்படுகிறது. இதில், உலகில் உள்ள சுமார் 200 நாடுகள் பங்கேற்கின்றன. இதன் முதல் கூட்டம், 2015ல் பெர்லினில் நடைபெற்றது. கடந்த 2015ம் ஆண்டு, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சிஒபி 21 கூட்டம் நடைபெற்றது. இதில், கையெழுத்தான பாரிஸ் ஒப்பந்தம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 



    இந்த நூற்றாண்டில் வெப்பநிலை உயர்வை 2 டிகிரி சென்டிகிரேடு அளவுக்குள் அல்லது முடிந்தால் 1.5 சென்டிகிரேடு அளவுக்குள் கட்டுபடுத்த வேண்டும் என்று உறுதி மொழியை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. 

    மேலும், இதில் இரண்டு முக்கிய இரண்டு விஷயங்கள் முன்வைக்கப்பட்டன. அதிக அளவிலான தொழிற்சாலை உற்பத்தி மூலம் அதிக அளவு கார்பனை வெளியேற்றும் நாடுகள் தங்களது கடப்பாடுகளை நிறைவேற்றியாக வேண்டும். இந்த நாடுகள் ஒன்று சேர்ந்து இதற்கு இழப்பீடாக வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர்கள் தருவதாகக் கூறின. இரண்டாவது, வளரும் நாடுகள் இத்தகையப் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்கள் அவர்களுக்குத் தரப்படும் என்பதாகும்.

    பாரிஸ் ஒப்பந்தம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? 

    இந்த ஒப்பந்தத்தின் கீழ், அனைத்து உலக நாடுகளுக்கும் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு (Nationally Determined Contributions) என்று சொல்லப்படுகின்ற கார்பன் வெளிஎற்றுதலைக் குறைபதற்கான இலக்கு வழங்கப்பட்டது. ஓவ்வொரு ஐந்தாண்டும் இந்த இலக்கை தேசிய நாடுகள் தாங்களாகவே தீர்மானித்து அதனை செயல்படுத்த வேண்டும்.

    சமீபத்தில் நடைபெற்ற கிளாஸ்கோ பருவநிலை உச்சிமாநாடு: 

    இந்த நூற்றாண்டுகள்  புவி வெப்பநிலையை 1.5 சென்டிகிரேடு அளவுக்குள் கட்டுபடுத்த வேண்டும் என்ற (பாரிஸ் ஒப்பந்தத்தில் 2 சென்டிகிரேடு) தீவிர இலக்கை கிளாஸ்கோ பருவநிலை உச்சிமாநாடு முன்னெடுத்தது. இதனை செயல்படுத்தும் வகையில், இந்த ஆண்டுக்குள் 2030 பருவநிலை செயல்திட்டங்களை உலக நாடுகள் தயாரிக்க வேண்டும். பாதிப்பு தவிர்ப்பு தோக்கத்துடன் ஒரு செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு அது உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

    2030 பருவநிலை செயல்திட்ட இலக்கினை அடைவதற்காக நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும். பருவநிலை மாறுதல் குறித்து நாடுகள் என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்ற வருடாந்திர ஒருங்கிணைப்பு அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.

    எரிபொருளுக்கான மூலாதாரமாக நிலக்கரியை பயன்படுத்துவதை அனைத்து நாடுகளும் குறைத்துக் கொள்ள முயற்சிகள் எடுக்க வேண்டும். அதேபோன்று புதை படிவ எரிபொருளுக்கான மானியங்களையும் நீக்க வேண்டும். அனைத்து நாடுகளும் படிப்படியாக நிலக்கரி பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    அனைத்து நாடுகளும் புதை படிவ எரிபொருள்களை படிப்படியாக தீக்க வேண்டும். ஏழை மற்றும் வளரும்  நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தருகின்ற நிதி அளவை 2019ல் வழங்கியதைவிட 2025ஆம் ஆண்டில் இரு மடங்காக உயர்த்தி தர வேண்டும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: TNPSC, UPSC

    அடுத்த செய்தி