• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • UPSC Civil Services Result 2020 | 2020-ம் ஆண்டு குடிமைப்பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

UPSC Civil Services Result 2020 | 2020-ம் ஆண்டு குடிமைப்பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

மாதிரி படம்

மாதிரி படம்

நேர்முகத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது

  • Share this:
    761 குடிமை பணியிடங்களுக்கு தேர்வு பெற்றவர்களின் முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

    IAS,IPS,IFS, மத்திய குரூப் A மற்றும் குரூப் B ஆகியகுடிமைப் பணிகளுக்கான தேர்வு இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட முதல் நிலை முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் தேர்வு பெற்ற 761 தேர்வர்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

    அதன்படி பொதுப்பிரிவில் 263பேர், உயர்சாதி ஏழைகள் 86பேர்,  இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 229 பேர், தாழ்த்தப்பட்டவர்கள் 122 மற்றும் பழங்குடியினர் 61பேர் என மொத்தம் 761 தேர்வு நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுள் 545 ஆண்கள் மற்றும் 216 பெண்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

    கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் 200 க்கும் குறைவான பெண்களே குடிமை பணி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு குடிமை பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பெண்களின் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: