UPSC சிவில் சர்வீஸ் மெயின்ஸ் 2020 தேர்வுக்கான அட்மிட் கார்ட் வெளியீடு.. முழு விவரம் இதோ..

கோப்புப் படம்

குடிமை பணிகள் முதன்மை தேர்வு 2020-க்கான (Civil Services Mains 2020) அட்மிட் கார்டை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

  • Share this:
    யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வு 2020-ஐ வெற்றிகரமாக முடித்தவர்கள் இப்போது அடுத்த தகுதி நிலை தேர்வுக்கு தங்கள் ஐஏஎஸ் மெயின்ஸ் 2020 அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய upconline.nic.in என்ற இணையதளத்தை அனுகலாம். மேலும்  UPSC CSE இ-அட்மிட் கார்டை upc.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். முன்னதாக சிவில் சர்வீசஸ் மெயின்ஸ் தேர்வுக்கான கால அட்டவணையை யூபிஎஸ்சி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    இ-அட்மிட் கார்டைப் பதிவிறக்குவதற்கான வழிமுறைகள்:

    * மெயின்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்க, அதிகாரப்பூர்வ வலைத்தளமான psc.gov.in அல்லது upsconline.nic.in ஆகியவற்றை பார்வையிட வேண்டும்.

    * UPSC-யின் முகப்புப்பக்கத்தில், ‘What’s New’ பகுதிக்கு செல்லவும். ‘இ-அட்மிட் கார்டு: சி.எஸ்.இ மெயின்ஸ் தேர்வுக்கான செயலில் உள்ள இணைப்பை நீங்கள் காண்பீர்கள்.

    * அதில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும் அதன்பிறகு ஒரு திரை தோன்றும்.

    * அதில் வழிமுறைகளை கவனமாகப் படித்த பிறகு, ‘ஆம்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

    * அடுத்த திரையில், உங்கள் உள்நுழைவு சான்றுகளை உள்ளிட வேண்டும்.

    * பின்னர் போர்ட்டலில், உங்கள் ஒப்புதல் அட்டை திரையில் காண்பிக்கப்படும்.

    * சிஎஸ்இ மெயின்ஸ் இ-அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து, அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.

    மெயின்ஸ் தேர்வுகளின் கால அட்டவணைபடி, 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி ஆரம்பித்து 9,10,16,17 என 5 நாட்கள் நடத்தப்படும் என யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு இரண்டு ஷிஃப்ட்டுகளில் நடத்தப்படும். காலை ஷிஃப்ட் 9 மணி முதல் நண்பகல் 12 மணி  வரை நடைபெறும். பின்னர் இரண்டாம் ஷிஃப்ட் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

    யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின்ஸ் தேர்வில் தகுதிபெறும் அனைத்து நபர்களும் நேர்காணல் சுற்றுக்குச் செல்ல முடியும். இது நிர்வாக சேவைகளில் சேர்க்கப்படுவதற்கான இறுதி கட்டமாகும். யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் நேர்காணல் சுற்று 2020-க்கு, காலியிடத்துடன் ஒப்பிடும் போது இரு மடங்கு நபர்களை ஆணையம் தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிக விடுமுறை எடுக்கும் பேராசியர்கள் பட்டியலை கேட்கும் உயர்கல்வித்துறை

    ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் பிரிலிம்ஸ் தேர்வு (prelims), முதன்மை தேர்வு (mains), மற்றும் நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரிலிம்ஸ் தேர்வு கடந்த மே மாதம் 31-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு அக்டோபர் 4-ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: