2020-ல் யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வை கடைசி வாய்ப்பில் தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

2020-ல் யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வை கடைசி வாய்ப்பில் தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

யு.பி.எஸ்.சி

முன்னதாக அக்டோபர் 4ம் தேதியன்று நடத்தப்படவிருந்த தேர்வை ஒத்தி வைக்கக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போது யு.பி.எஸ்.சி தேர்வை ஒத்திவைக்க இயலாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது

  • Share this:
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபரில் யு.பி.எஸ்.சி முதற்கட்ட தேர்வை எழுதாமல் தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதியன்று சிவில் சர்வீசஸ் முதற்கட்ட தேர்வை யு.பி.எஸ்.சி நடத்தியது. இதில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக தேர்வு எழுதாமல் பலர் தவறவிட்டனர். கொரோனா சூழல் காரணமாக தேர்வுக்கு தயாராவதில் ஏற்பட்ட சிரமத்தை காட்டி கடைசி வாய்ப்பை தவறவிட்ட பல தேர்வர்களும், தங்களுக்கு மீண்டும் ஒரு இறுதி வாய்ப்பை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர்.

(முன்னதாக அக்டோபர் 4ம் தேதியன்று நடத்தப்படவிருந்த தேர்வை ஒத்தி வைக்கக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போது யு.பி.எஸ்.சி தேர்வை ஒத்திவைக்க இயலாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது).

இதனிடையே இந்த வழக்கு AM Khanwilkar தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிட்டர் ஜெனரல் ராஜூ அளித்த அறிக்கையில் கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி யு.பி.எஸ்.சி முதற்கட்ட தேர்வை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

2020ல் தங்களின் கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க மத்திய அரசு தொடக்கத்தில் தயக்கம் காட்டியது. எனினும் வயது வரம்பிற்குள் வரும் தேர்வர்களுக்கு மீண்டும் ஒரே ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021ல் தேர்வு எழுதுவதற்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் இது ஒரு முன்னுதாரனமாக கருதப்படாது எனவும் யு.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி இதே வழக்கு விசாரணையில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படாது என மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: