• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாறு காணாத வகையில் முதுகலை பட்டப்படிப்பிற்கு குவிந்த விண்ணப்பங்கள்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாறு காணாத வகையில் முதுகலை பட்டப்படிப்பிற்கு குவிந்த விண்ணப்பங்கள்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாறு காணாத வகையில் முதுகலை பட்டப்படிப்பிற்கு குவிந்த விண்ணப்பங்கள்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாறு காணாத வகையில் முதுகலை பட்டப்படிப்பிற்கு குவிந்த விண்ணப்பங்கள்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு A தரமதிப்பீடு வழங்கப்பட்டுள்ளதால், வரலாறு காணாத அளவில் முதுகலை பட்டப் படிப்பிற்கு 4942 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

  • Share this:
    மதுரை-தேனி செல்லும் சாலையில் அமைந்துள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 44 துறைகளில் மாணவ-மாணவிகள் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். அதற்கு ஆண்டு தோறும் 1100 மாணவர்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன.

    அதே போல் 2021- 2022 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மே 1-ஆம் தேதியிலிருந்து ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம் என காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பை தொடர்ந்து, தற்போது எந்த வருடமும் இல்லாத அளவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு அதிக அளவில் அதாவது 4942 மாணவர்கள் முதுகலை பட்டப் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

    Also read: கட்டணம் இல்லாமல் கல்விச்சேவை.. வியப்பை அளிக்கும் தனியார் கல்லூரி அறிவிப்பு

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இதற்கு மிக முக்கியமான இரண்டு காரணங்கள் உள்ளது என்றும், கொரோனா பாதிப்பினால் இணையம் மூலமாகவே பல்கலைக்கழகத்தில் வகுப்புகளை நடத்த வேண்டிய தேவை இருந்தது. அதே நேரத்தில் அதனுடைய செயல்முறை கோப்புகளை நேரடியாக நிகழ்த்துவதற்கு காமராஜர் பல்கலைக்கழகம் ஈடுபட்டது என்று அவர் தெரிவித்தார்.

    கடந்த மார்ச் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்ட தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு-(நாக்) பல்கலைக்கழகத்திற்கு A தரமதிப்பீடு வழங்கியதால் இந்திய தரவரிசையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 17வது இடத்தை பிடித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனால்கடந்த ஆண்டு முதுகலை படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை விட இந்த ஆண்டு இரண்டு மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளது.

    இது பல்கலைக்கழகத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக 4,942 விண்ணப்பங்கள் வந்திருப்பது மகிழ்ச்சியாகவும், சாதனையாக கருதுவதாக பல்கலைக்கழக தேர்வாணையர் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் - சிவக்குமார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: