ஹோம் /நியூஸ் /கல்வி /

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் தமிழக அரசின் முடிவு சாத்தியமாகுமா?

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் தமிழக அரசின் முடிவு சாத்தியமாகுமா?

தமிழக அரசு

தமிழக அரசு

நீட் மசோதா ,கூட்டுறவு சங்கத் தலைவர்களின் பதவி காலத்தை குறைக்கும்  மசோதா, சித்தா மருத்துவ பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான சட்ட மசோதா உள்ளிட்ட 11 மசோதாக்கள் தமிழக ஆளுநர் முன்னிலையில் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்நிலையில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா என்ற கேள்வி இயல்பாகவே எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது. எனினும்,  இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் தற்போதைய சூழலில்  சுமூகமான உறவு இல்லாத நிலை உள்ளது.  நீட் மசோதா ,கூட்டுறவு சங்கத் தலைவர்களின் பதவி காலத்தை குறைக்கும்  மசோதா, சித்தா மருத்துவ பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான சட்ட மசோதா உள்ளிட்ட 11 மசோதாக்கள் தமிழக ஆளுநர் முன்னிலையில் நிலுவையில் இருந்து வருகின்றன. இதுவரை இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

மிக முக்கியத்துவம் வாய்ந்த நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவும் இதில் அடங்கும்.  தமிழக முதல்-அமைச்சர் நேரடியாக ஆளுநரை சந்தித்து மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் எனகோரிக்கை விடுத்த போதும் தற்போது வரை ஆளுநர் முன்னிலையில் அந்த மசோதா  கிடப்பில் இருந்து வருகின்றது.

இத்தகைய சூழ்நிலையில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள  துணைவேந்தர்களை நியமிக்கும் விதிமுறைகள்

துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவை தமிழக ஆளுநர் அமைத்துத் உத்தரவிடுவார். இதுதொடர்பாக தமிழக அரசு  தேடுதல் குழு அமைக்கப்பட்டதற்கான  அரசாணையை வெளியிடும். காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு ஆட்களை  நியமிக்க விண்ணப்பங்கள் பெறுவதற்கான அறிவிப்பு ஆளுநரின் உத்தரவுப்படி நாளிதழ்களில்  வெளியிடப்படும்.

இதையும் படிங்க: தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும்.. பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்!

இதையடுத்து விண்ணப்பம் செய்ய உரிய அவகாசம் அளிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். இதற்கடுத்தப்படியாக  பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதி உள்ள நபர்களிடம் தேடுதல் குழு நேர்காணல் நடத்தும். நேர்காணல் நடத்தப்பட்டு  அவர்களுள்  3 நபர்களின் பெயர்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். மூன்று நபர்களில் இருந்து தகுதியான ஒரு நபரை ஆளுநர் துணைவேந்தராக நியமனம் செய்வார்.

மேலும் படிக்க: 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேரம் குறைப்பு

அதற்கான ஆணையில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் கையெழுத்திட்டு துணைவேந்தராக நியமிக்கப்படும் நபரிடம் ஆளுநர் உத்தரவை வழங்குவார். இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசால் நியமிக்க முடியும். தற்போது உள்ள சூழலில் ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க மாட்டார் என்றும் பிற மசோதாக்களை போல் இதுவும் கிடப்பில் போடப்படவே வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

Published by:Murugesh M
First published:

Tags: Tamil Nadu Governor, University vise chancellor