திரைத்துறையில் நடிகை சில்க் ஸ்மிதா ஏற்படுத்திய தாக்கம் என்ற தலைப்பில் எல்லாம் ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்தால், கல்வித்தரம் எங்கே போகும் என்று, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணை தலைவர் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்துவிட்டது என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இதையடுத்து பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்துவது குறித்து, அண்மையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள் உடன் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார் .
இதை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய 131 கலை அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி முதல் நாளான இன்று அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது . இதில் துணைவேந்தர் கவுரி, தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணை தலைவர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க - அஜித் படத்துக்கு இணையாக விளம்பரம்: சர்ச்சைகள் குறித்து வி.பி.துரைசாமி பேட்டி
இந்த விழாவில் பேசிய ராமசாமி,சென்னைப் பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்துவிட்டது என்று சென்னை உயர்நீதி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த கருத்து உண்மையாக கூட இருக்கலாம். நமக்குத் தெரியவில்லை. இதனை சரி செய்ய வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்காகவே ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி இன்று தொடங்கியுள்ளது. விருப்பமில்லாத மாணவர்களும் விரும்பும் வகையில் பாடம் நடத்த வேண்டும்.
இதையும் படிங்க - மனைவியின் உணர்வை மதித்த ரியல் ஹீரோ.. ஆஸ்கரில் தொகுப்பாளருக்கு பளார் விட்ட நடிகருக்கு ராமதாஸ் பாராட்டு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான் பணியாற்றிய காலகட்டத்தில்,
திரைத்துறையில் நடிகை சில்க் ஏற்படுத்திய தாக்கம் என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை ஒருவர் சமர்ப்பித்தார். நான் அதனை ஏற்கவில்லை. ஆனால் நான் அங்கிருந்து துணைவேந்தராக சென்ற பிறகு , அடுத்த பத்து நாட்களில் அந்த ஆய்வுக்கட்டுரை ஏற்றுக்கொண்டு, முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இப்படி எல்லாம் இருந்தால் எப்படி கல்வித்தரம் உயரும் என கேள்வி எழுப்பினார்.
நடிகை சில்க் ஸ்மிதா நடித்த காலகட்டத்தில் தமிழ் திரை உலகில் கனவுக் கன்னியாக வலம் வந்தார். நடிகை சில்க் ஸ்மிதா இடம்பெற்றாலே விநியோகஸ்தர்களிடம் திரைப்படங்கள் விற்று தீர்ந்தன. திரையரங்குகளிலும் அவர் நடித்த படங்கள் பெரும் வெற்றி அடைந்தன. அவர் ரசிகர்கள் மத்தியில் ஏற்ப்படுத்திய தாக்கம் அளவிற்கு வேறு எந்த நடிகையும் இதுவரை ஏற்ப்படுத்தியதில்லை. அதன் விளைவே சில்க்கின் ஏற்ப்படுத்திய தாக்கத்தை ஆய்வுகள் செய்யும் அளவிற்கு சென்றது என்று சொன்னால் அது மிகையல்ல.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.