ஹோம் /நியூஸ் /கல்வி /

முதுகலை படிப்புகளுக்கு வரும் 13ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்- சென்னை பல்கலைக்கழகம்

முதுகலை படிப்புகளுக்கு வரும் 13ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்- சென்னை பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம்

2022-23ம் கல்வி ஆண்டுக்கு சேர விரும்பும் மாணவர்களுக்கு விண்ணப்ப தேதி குறித்த அறிவிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பல்வேறு துறைகளில் 2022-23ம் ஆண்டிற்கான முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர வரும்  13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

  ஆர்வமுள்ள மாணவர்கள், www.unom.ac.in என்ற அதிகாரப்பூர்வ  இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  சென்னை பல்கலைக்கழகம்:

  19ம் நூற்றாண்டின் இடையில் சென்னைப் பல்கலைக்கழகம் கட்டமைக்கப்பட்டது. இருப்பினும், தற்போது வரை  மாணவர்களுக்கும் சமுதாயத்திற்குமான மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப இப்பல்கலைக்கழகம் தன்னை தொடர்ந்து  மாற்றியமைத்து வருகிறது .

  இந்தியாவில், குறிப்பாகத் தென் மாநிலத்தில் அறிவை மேம்படுத்துவதிலும், அறிவுக் கருத்துகளை உருவாக்குவதிலும் வலுவான அடித்தளமிட்ட நிறுவனங்களில் ஒன்றாக இந்தப் பல்கலைக்கழகம் விளங்குகிறது. சென்னைப் பல்கலைக்கழகம் இந்த மண்டலத்தில் “பல்கலைக்கழகங்களின் தாய்” என்றும்  போற்றப்படுகிறது.

  முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பா? உண்மை நிலவரம் என்ன?

  டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர் வி.வி. கிரி, திரு. நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர். வெங்கடராமன், டாக்டர் கே.ஆர். நாராயணன், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என நாட்டின் ஆறு குடியரசுத் தலைவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.

  சென்னை ஐஐடி-யில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - பவர் கிரிட் நிறுவனம் உடன்படிக்கை

  நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமன், டாக்டர் சுப்பிரமணியன் சந்திரசேகர் ஆகியோர், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கே. சுப்பா ராவ், நீதிபதி எம். பதஞ்சலி சாஸ்திரி ஆகியோர் இப்பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்

  2021 இந்தியா உயர்காலவி தரவரிசை பட்டியலில் சென்னை பல்கலைக்கழகம 28வது இடத்தைப்  பிடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Madras University