Home /News /education /

ஆன்லைன் முறையில் வகுப்புகளைத் தொடங்க சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவு..

ஆன்லைன் முறையில் வகுப்புகளைத் தொடங்க சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவு..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கல்லூரிகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை தொடங்க சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கொரோனோ காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் வகுப்புகள் கல்லூரிகளில் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

    அதில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை 2ஆம் மற்றும் 3ஆம் ஆண்டு வகுப்புகள் மற்றும் எம்சிஏ 2ஆம் ஆண்டு முதுகலை வகுப்புகள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் துவக்கப்பட வேண்டும் என்று உத்தவிட்டுள்ளனர்.

    மேலும் இளநிலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் துவக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.



    தனியார் கல்லூரி நிர்வாகங்கள் ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்கு பேராசிரியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் அதேபோன்று வகுப்பு தேர்வுகள் , கருத்தரங்கம் ஆகியவற்றை ஆன்லைனில் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க...சச்சின் டெண்டுல்கருடன் போட்டோ: ரூ.60 கோடி மோசடி

    மேலும் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் இளநிலை வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கையை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: College, Online

    அடுத்த செய்தி