• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • இந்த ஆண்டு புதிய கல்லூரிகளுக்கும், புதிய பாடப்பிரிவுகளுக்கும் அனுமதி கிடையாது - யுஜிசி முடிவு

இந்த ஆண்டு புதிய கல்லூரிகளுக்கும், புதிய பாடப்பிரிவுகளுக்கும் அனுமதி கிடையாது - யுஜிசி முடிவு

யூஜிசி

யூஜிசி

நாடு முழுவதும் இந்த ஆண்டு புதிய கல்லூரிகளுக்கும், புதிய பாடப்பிரிவுகளுக்கும் அனுமதி கிடையாது என்று, பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

  • Share this:
கொரோனா தொற்றால் இந்த ஆண்டு உரிய காலத்தில் கல்வி நிறுவனங்கள் துவக்கப்படவில்லை. இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு இந்த ஆண்டு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் நாடு முழுவதும் புதிய கல்லூரிகளுக்கும்,  பாடப்பிரிவுகளுக்கும்  இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படாது என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள  கலை அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவை துவக்க வேண்டும் என்றாலோ புதிய கல்லூரிகளை துவக்க வேண்டும் என்றாலோ பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியை பெற வேண்டும்.

அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதோடு, புதிய பாடப்பிரிவுகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

Also read... ₹2.92 லட்சம் மின் கட்டணம் - கரூர் விவசாயிக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்

இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கல்விப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் நடப்பாண்டில் நாடு முழுவதும் எந்த ஒரு புதிய கல்லூரிகளுக்கோ அல்லது புதிய பாடப்பிரிவுகளுக்கோ அனுமதி கிடையாது என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்திருப்பதாக தமிழக உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: