கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் - மத்திய அரசு புதிய உத்தரவு

College Exam | கல்லூரிகளின் இறுதி ஆண்டு தேர்வை செப்டம்பர் கடைசியில் நடத்த யு.ஜி.சி அறிவுறுத்தியுள்ளது.

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் - மத்திய அரசு புதிய உத்தரவு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 7, 2020, 6:38 AM IST
  • Share this:
கொரோனா ஊரடங்கால் மார்ச் / ஏப்ரல் மாதங்களில் நடக்க வேண்டிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

குறிப்பாக இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாததால் அவர்களின் கல்விக்காலம் முடிவடையாமல் உள்ளது. இறுதி ஆண்டு தவிர பிற ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை செப்டம்பர் மாத கடைசியில் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு கேட்டுக் கொண்டுள்ளது.

படிக்க: கொரோனா தொற்று பாதிப்பின் புதிய அறிகுறிகள்

படிக்க: குவைத் புதிய சட்டம் - தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் அபாயம்


இந்த தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வை சுகாதாரத்துறையின் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

ஆன்லைன், முறையிலும் தேர்வு நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading