அடுத்த 3 ஆண்டுகளில் ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள 38,800 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.
மத்திய அரசின் 2023-24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின்போது, பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள 38,800 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளி:
பழங்குடியின மாணவர்களுக்காக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான குடியிருப்புப் பள்ளிகளை அமைப்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 275(1)-ன் கீழ் இந்திய அரசின் நல அமைச்சகம் நிதியை வெளியிட்டு வருகிறது. 2018-19ம் ஆண்டு இதற்கென தனித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 50 சதவீதத்திற்கு மேல் பழங்குடியின மக்கள் தொகை உள்ள வட்டங்களிலும், அல்லது குறைந்தபட்சம் 20 ஆயிரம் பழங்குடியினர் உள்ள ஒவ்வொரு வட்டத்திற்கும் ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளை அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேற்கூறிய மக்கள் எண்ணிக்கை அடிப்படையில், நாடு முழுவதும் 740 வட்டங்கள் கண்டறியப்பட்டன. தற்போது வரை, நாடு முழுவதும் 394 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 1,05,463 பழங்குடியின மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றன.
Budget 2023 Live: உடனுக்குடன் தகவல்கள் இங்கே
ஆசிரியர் பற்றாக்குறை:
முன்னதாக, ஏகலவ்யா மாதிரிப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த டிசம்பர் மாதம், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர், ரேணுகா சிங், " ஏகலவ்யா பள்ளி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 394 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 7030 ஆசிரியர் தேவை உள்ளது என்றும் , 4138 ஆசிரியர் பணியமர்த்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடுமுழுவதும் 740 பள்ளிகள் செயல்படும் என்றும், 38,800 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.