குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவுத்தினர், தரமான புத்தகங்களை அணுகும் வகையில் தேசிய டிஜிட்டல் நூலகம் உருவாக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2023-24ம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி அறிக்கையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களைவையில் தாக்கல் செய்தார். அனைவரையும் உள்ளடக்ககிய வளர்ச்சி, கடைசி நபரை சென்றடைவது, முதலீடு மற்றும் கட்டமைப்பு, ஆற்றல் மற்றும் வெளிக்கொணர்தல், பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி, நிதித்துறை என்ற 7 முன்னுரிமைகள் அடைப்படையில் பட்ஜெட் அறிக்கை தயார் செய்யப்படுவதாக தெரிவித்தார்.
கல்வித் துறை தொடர்பான அறிவிப்பில், "மொழிகள், படைப்பு வகைகள், புவியியல் பரப்பைக் கடந்து குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவுத்தினர் தரமான புத்தகங்கள் கிடைக்க தேசிய டிஜிட்டல் நூலகம் உருவாக்கப்படும்" என்றும் தெரிவித்தார். மேலும், பஞ்சாயத்து மற்றும் வார்டுகளில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவுத்தினருக்கென நூலக கட்டிடங்களை அமைப்பதற்கும், தேசிய டிஜிட்டல் நூலகத்தை அணுகுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கவும், கொரோனா கால கற்றல் இழப்புகளை சரி செய்யவும் பாடபகுதிகளில் அல்லாத தலைப்புகள் நூலகத்தில் இடம்பெற நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தெரிவித்தார். தேசிய புத்தக நிறுவனம், குழந்தைகள் புத்தக நிறுவனம் மற்றும் இதர நிறுவனங்களை இந்த முயற்சியில் ஈடுபடுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஆசிரியர் பயிற்சி முற்றிலும் மறுசீரமைக்கப்பட உள்ளதாக தெரிவித்த அவர், புதுமையான கற்பித்தல் வழிமுறைகள், ICT செயல்படு மூலம் பயிற்சியை அளிக்கும் துடிப்பான நிறுவனங்களாக மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பட்ஜெட் - கல்வி நிதி ஒதுக்கீடு:
2023-24 நிதியாண்டின் பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ. 1.12 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2012-23-ல் இந்த ஒதுக்கீடு ரூ.1.4 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது, கடந்த ஆண்டை விட இந்தாண்டு ஒதுக்கீடு வெறும் 8% ஆக மட்டுமே அதிகரித்துள்ளது. இதில், பள்ளிக்கல்வித்துறை ரூ.68,804 கோடியும், உயர்கல்வித் துறை ரூ.44,094 கோடியும் பெற்றுள்ளன.
இதையும் வாசிக்க: Budget Announcement 2023: அடுத்த 3 ஆண்டுகளில் 38,800 ஆசிரியர்கள் நியமனம்: நிர்மலா சீதாராமன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Union Budget 2023