முகப்பு /செய்தி /கல்வி / இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்ய உக்ரைன் மருத்துவ மாணவர்களுக்கு ஒருமுறை வாய்ப்பு

இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்ய உக்ரைன் மருத்துவ மாணவர்களுக்கு ஒருமுறை வாய்ப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

ஈராண்டுகள்  பயிற்சி முடித்த மாணவர்கள் மட்டுமே இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்து மருத்துவம் பார்க்க முடியும்

  • Last Updated :

ரஷ்யா படையெடுப்பால்,  உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு அயல்நாட்டு மருத்துவ தணிக்கை பரிசோதனை தேர்வில் (Foreign Medical Graduates Exam) வாய்ப்பு வழங்கப்படும் என்று இந்திய மருத்துவக்  கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், " 29.04.2022 நாளன்று வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ரஷ்யா படையெடுப்பால், கடந்தாண்டு உக்ரைன் நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் படித்து வந்த இந்திய மருத்துவ மாணவர்கள், ரஷ்யா படையெடுப்பால்  இந்தியாவுக்கு திரும்பி, அதன் பின் மருத்துவப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழ் பெற்ற மாணவர்கள், FMGE எனப்படும் அயல்நாட்டு மருத்துவ தணிக்கைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

இத்தேர்வுக்கு தகுதி பெற,  2022, ஜுன் 30 அன்றோ (அ) அதற்கு முன்பாகவோ மருத்துவப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். 

தேர்ச்சி  பெற்ற மாணவர்கள், இந்தியாவில்  மருத்துவம் பார்ப்பதற்கு  இரண்டு Compulsory Rotating Medical Internship என்ற பயிற்சி காலத்தை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஈராண்டுகள்  பயிற்சி முடித்த மாணவர்கள் மட்டுமே இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்து மருத்துவம் பார்க்க முடியும்.

இவ்வாறு, இந்திய மருத்துவக்  கவுன்சில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

First published:

Tags: Medical Students