Home /News /education /

வெளிநாட்டு மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் - உக்ரைன் மருத்துவ கல்லூரிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் - உக்ரைன் மருத்துவ கல்லூரிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் தங்கள் பயிற்சியை நிறைவு செய்யும் வகையில் அந்தந்த நாடுகள் அனுமதி வழங்க வேண்டும்  என்று உக்ரைன் உயர்கல்வி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் தங்கள் பயிற்சியை நிறைவு செய்யும் வகையில் அந்தந்த நாடுகள் அனுமதி வழங்க வேண்டும் என்று உக்ரைன் உயர்கல்வி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் தங்கள் பயிற்சியை நிறைவு செய்யும் வகையில் அந்தந்த நாடுகள் அனுமதி வழங்க வேண்டும் என்று உக்ரைன் உயர்கல்வி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

Ukraine Medical Students:  ரஷ்ய படையெடுப்பு காரணமாக உக்ரைனில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், போர் தொடங்கியதில் இருந்து, ஆயிரக்கணக்கான  மருத்துவ மாணவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். இவர்களின், எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், தங்கள் நாட்டின் சர்வதேச மாணவர்கள் உடனடியாக படிப்பைத் தொடர உக்ரைன் மருத்துவ உயர்கல்வி நிறுவனங்கள் தீவிர  முயற்சி எடுத்து வருகின்றன. அதில், ஒருபகுதியாக சர்வதேச மாணவர்கள் தங்களது சொந்த நாடுகளில்  உள்ள மருத்துவமனைகளில் மருத்துவப் பயிற்சிக் கல்வியை நிறைவு செய்ய அனுமதி வழங்கியுள்ளன. 

உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழ்நிலையில்,  மருத்துவ மாணவர்கள் தற்போது ஆன்லைன் மூலம்  தங்கள்  படிப்பைத் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், உக்ரைனில் உள்ள மருத்துவமனைகளில் பயிற்சி செய்வதற்கான (Practical Course/Internship) சாத்தியக் கூறுகள் தற்போது இல்லை. எனவே,    மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் தங்கள் பயிற்சியை நிறைவு செய்யும் வகையில் அந்தந்த நாடுகள் அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன.

ரஷ்யா - உக்ரைன் போர்


டினிப்ரோ அரசு மருத்துவக் கல்லூரி (Dinipro State Medical University) வி.என், கரசின் கார்கிவ் தேசிய பல்கலைக்கழகம் (V N Karazin Kharkiv National University) தேசிய பிரோகோவ் நினைவு பல்கலைக்கழகம் (National Pirogov Memorial University) ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. மேலும், இதுதொடர்பாக வெளிநாடுகளில் அரசு மருத்துவ  முகமைகளிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து வந்த இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படிப்பைத் தொடர வாய்ப்பு

முன்னதாக, உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தங்களது படிப்பைத் தொடர உடனடியாகத் தீர்வு காண உரிய வழிமுறைகளைக் கண்டறிய  வேண்டுமென்று  தமிழக முதலவர் மு.க ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை வைத்திருந்தார்.  ஆனால், இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது அல்லது இடமாற்றம் செய்வதற்கான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று சுகாதாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் பார்வதி பவார் மக்களவையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மக்களவையில் கேள்வி நேரத்தில் பதிலளித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், " உக்ரைனை போலவே போலந்து,கெஜகஸ்தான், ஹங்கேரி ரொமானியா, செக்குடியரசு உள்ளிட்ட நாடுகளில் பாடத்திட்டங்கள் இருப்பதால் அங்கு மாணவர்கள் சென்று படிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  உக்ரைனின் அண்டை நாடுகளிடம் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.  
Published by:Salanraj R
First published:

Tags: Indian Medical Council, Russia - Ukraine

அடுத்த செய்தி