கல்லூரிகளில் ஆன்லைன் பட்டபடிப்புக்கு யூஜிசி அனுமதி.. நேரடி படிப்புக்கு இணையானது என அறிவிப்புஆன்-லைன் வழியில் பட்டப்படிப்புகள் பயில பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது.
நேரடியாக கல்லூரி சென்று பட்டப்படிப்பு முடிக்கும் மாணவருக்கு சமமாக ஆன்-லைன் வழியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் கருதப்படுவார்கள்.
விரைவில் நாடு முழுவதும் 900 தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஆன்-லைன் வழியில் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.
முன்னதாக பல்கலைக்கழகங்களில் மட்டும் ஆன்லைன் வழி பட்டப்படிப்புகளில் சேரலாம் என்கிற நடைமுறையை மாற்றி 900 கல்லூரிகளில் நாடு முழுவதும் புதிய நடைமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு முடிவு செய்துள்ளது.
ஆன்-லைன் வழியில் பட்டப் படிப்புகளில் சேரும் புதிய நடைமுறையை பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி அமல்படுத்த உள்ளது.
Also read: பூணூல் அறுப்பு போராட்ட அறிவிப்புக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டனம்
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2035ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த புதிய நடைமுறை நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது அந்தவகையில் ஆன்லைன் வழி இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியும் முதுகலை படிப்புகளில் சேர இளங்கலை படிப்புகளில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.
ஆன்-லைன் வழி பட்டப்படிப்புகளை துவங்குவதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் முன் அனுமதியை பெற அவசியம் இல்லை என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது எனினும் ஆன்லைன் பட்டப்படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் NAAC எனப்படும் தர மதிப்பீட்டில் 3.26 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.