Home /News /education /

இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்க கூடுதலாக 25% இடங்கள்; நுழைவு தேர்வு இல்லை!

இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்க கூடுதலாக 25% இடங்கள்; நுழைவு தேர்வு இல்லை!

வெளிநாட்டு மாணவர்கள்

வெளிநாட்டு மாணவர்கள்

வெளிநாட்டு மாணவர்களுக்கான இடங்களில் அவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்களுக்கு நுழைவு தேர்வு கிடையாது எனவும் பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    இந்தியாவில் உள்ள பல்கலைகழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயில கூடுதலாக 25% இடங்கள் உருவாக்க பல்கலைக்கழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது.

    இந்தியாவில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை கல்வி தரத்தை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்வது தொடர்பாக கடந்த வாரம் பல்கலைகழக மானியக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், தற்போது இளநிலை மற்றும் முதுநிலை கல்வி நிறுவனங்களில் இருக்கும் இடங்களை விட கூடுதலாக 25% இடங்கள் உருவாக்குவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அந்த இடங்களில் வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்களுக்கு நுழைவு தேர்வு கிடையாது எனவும் அறிவித்துள்ளது.

    அவர்கள் நேரடியாக அந்தந்த பல்கலைகழகங்களிலேயே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த இடங்கள் காலியாக இருந்தாலும் வெளிநாட்டவர்களை தவிர வேறு யாரும் விண்ணப்பிக்க கூடாது. வெளிநாட்டு பாஸ்போர்ட் உடையவர்கள் வெளிநாட்டவராக கருதப்படுவார்கள்.

    அந்தந்த கல்வி நிறுவனங்களே தங்கள் உட்கட்டமைப்பிற்கு ஏற்ப கூடுதல் இடங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் பின்பற்றப்படும் கல்வி தகுதிக்கு இணையான கல்வி தகுதியை அந்த மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

    இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்களை கல்வி கற்கும் விகிதத்தை அதிகரிக்கவே யுஜிசி இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு 23,439 வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்க வந்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு 75000 மாணவர்கள் கல்வி கற்பதற்காக இந்தியா வந்தனர்.  கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Students, UGC

    அடுத்த செய்தி