நவம்பர் 1 முதல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் - மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் பெற்றோர் கல்லூரி சேர்க்கைக்கு கட்டிய பணத்தை திரும்ப பெற விரும்பினால் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் முழுத் தொகையும் அளிக்க வேண்டும் என்றும் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

நவம்பர் 1 முதல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் - மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: September 22, 2020, 3:19 PM IST
  • Share this:
2020-21 கல்வியாண்டின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பின் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடித்துவிடவேண்டும். இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

இந்த மாணவர்களுக்கு அடுத்தாண்டு மார்ச் 8-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை முதல் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். அடுத்த பருவத்தேர்வுக்கான வகுப்புகள் அடுத்தாண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கும்.


Also read... ரேஷன் கடைகளில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்குமாறு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு..

ஈவன் செமஸ்டர் எனப்படும் இரட்டை படை பருவத் தேர்வுகள் அடுத்தாண்டு ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும். கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் பெற்றோர் கல்லூரி சேர்க்கைக்கு கட்டிய பணத்தை திரும்ப பெற விரும்பினால் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் முழுத் தொகையும் அளிக்க வேண்டும் என்றும் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading