இரண்டாம் கட்ட யுஜிசி-நெட் தேர்வு கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு (ஜே ஆர் எஃப்) மற்றும் உதவி பேராசிரியர் தகுதிக்கான யூஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக நடத்தப்படாத 2021 டிசம்பர் தேவை, 2022 ஜூன் தேர்வுடன் ஒருங்கிணைத்து கடந்த ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு அமர்வுகளாக நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, முதல் கட்டத் தேர்வு ஜுலை மாதம் 08, 09, 11, 12 ஆகிய நாட்களில் கணினி அடிப்படையில் நடத்தப்பட்டது. அரசியல் அறிவு, மராத்தி, சீனம், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 30 பாடநெறிகளுக்கு, நாடு முழுவதும் 225 நகரங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இரண்டாம் கட்டத் தேர்வு ஆகஸ்ட் 12,13,14 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாக காரணங்களினால் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சமூக அறிவியல், அரசு அறிவியல், வரலாறு, இந்தி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட 64 பாடநெறிகளுக்கு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு (செப். 30 வரை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையம் அமைந்துள்ள இடம் தொடர்பாக தகவல் (Examination City Centre slip) செப். 11ல் இருந்தும், தேர்வு அனுமதிச் சீட்டு செப். 16ல் இருந்தும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: JEE அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது
மேலும், தேர்வு குறித்து சமூக ஊடங்களில் உலவும் போலியான அறிவிப்புகளை நம்ப வேண்டாம், ugcnet.nta.nic.in ல் வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
UGC-NET December 2021 and June 2022 (Merged Cycles) Phase II
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Examination, NET, UGC