முகப்பு /செய்தி /கல்வி / UGC-NET தேர்வு தேதிகள் அறிவிப்பு

UGC-NET தேர்வு தேதிகள் அறிவிப்பு

காட்சி படம்

காட்சி படம்

UGC NET Exam Date: தேர்வு  அட்டவணை குறித்த விரிவான விவரங்கள்  http://nta.ac.in, https://ugcnet.nta.nic ஆகிய இணையதளங்களில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

UGC NET Exam Date: இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு (ஜே ஆர் எஃப்) மற்றும் உதவி பேராசிரியர் தகுதிக்கான யுஜிசி-நெட் தேர்வுகளின்  தேதிகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

அதன் படி, 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் ஆகிய இரண்டு அமர்வுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் தேர்வு, ஜுலை மாதம் 08, 09, 11, 12 ஆகிய நாட்களிலும் ஆகஸ்ட் மாதம் 12,13,14  ஆகிய நாட்களிலும் கணினி அடிப்படையில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. தேர்வு  அட்டவணை குறித்த விரிவான விவரங்கள்  http://nta.ac.in, https://ugcnet.nta.nic ஆகிய இணையதளங்களில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி –என்இடி தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு சார்பாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக நியமனம் பெறுவதற்குத் தகுதி பெறுகின்றனர். தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள்காலம் முழுவதும் செல்லுபடியாகும்.

அதேபோன்று, உயர்கல்வி துறைகளில் ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இதுதேர்வின் மூலம் ஜே ஆர் எஃப் எனப்படும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை சான்றிதழை பெறுகின்றனர். இந்த சான்றிதழின் ஆயுள் காலம் மூன்றாண்டுகள் வரை செல்லுபடியாகும்.

தேர்வின் தன்மை: இரண்டு தாள்கள் கொண்ட தேர்வாகும். முதல் தாளில் பொது அறிவு குறித்த 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். புறநிலை வகையில் பல்வேறு விடைகளிலிருந்து தெரிவுசெய்யும் வினாக்களாக அமையும். முதல் தாளின் தேர்வு காலம் ஒரு மணி நேரம் ஆகும்.

இதையும் வாசிக்கஇல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ஆசிரியர் காலி பணியிடங்களில் முன்னுரிமை

இரண்டாம் தாள் பாடம் சார்ந்த 100 கேள்விகளை கொண்டதாக அமையும். இந்த கேள்விகள் விண்ணப்பதாரர் தெரிவு செய்த பாடங்களிலிருந்து இடம்பெறும். இந்த தேர்வு இரண்டு மணிநேர கால அவகாசம் கொண்டது.

இதையும் வாசிக்கதொடக்கக் கல்வி ஆசிரியர் ஆக வேண்டுமா..? அரசின் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பியுங்கள்... விவரம் இதோ...

83 பாடப்பிரிவுகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர், தங்களது முதுநிலை கல்வியோடு தொடர்புடைய பாடப் பிரிவை நெட் தேர்வுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யூஜிசி அறிவுறுத்தியுள்ளது. உதாரணமாக, அரசியலறிவு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற மாணவர்கள், நெட் தேர்வில் பொது நிர்வாகம் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று யுஜிசி முன்னதாக தெளிவுபடுத்தியிருந்தது.

First published:

Tags: Competitive Exams, Entrance Exam, NET, UGC