Home /News /education /

UGC - NET தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு... விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

UGC - NET தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு... விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

UGC - NET தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு

UGC - NET தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு

UGC NET 2022 | கடந்த 20-ம் தேதியுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் கூடுதல் அவகாசம் கோரி தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உதவிப் பேராசிரியர் பணிக்கும், உதவித் தொகை பெறுவதற்கும் நடத்தப்படும் UGC - NET தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    யுஜிசி நெட் (UGC - NET) தேர்வு 2022-க்கான (UGC NET 2022) விண்ணப்பப் படிவத்தை தேசிய தேர்வு முகமையான (NTA) இந்த மாதம் வெளியிட்டது. இந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற உள்ள தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மே 20 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான ugcnet.nta.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என முன்னதாக தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் தற்போது இதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணிக்கும், உதவித் தொகை பெறுவதற்கும் நடத்தப்படும் UGC - NET தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 20-ம் தேதியுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் கூடுதல் அவகாசம் தேவை என்ற  தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 30-ம் தேதிக்குள் https://ugcnet.nta.nic.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    2021 டிசம்பர் மாதத்தில் நடத்தப்படவிருந்த NET தேர்வையும், 2022 ஜூனில் நடத்தப்பட உள்ள NET தேர்வையும் ஒரே நேரத்தில் நடத்துகிறது NTA. தேர்வு தேதி , ஹால் டிக்கெட் பெறுதல், தேர்வு மையங்கள் விவரம் உள்ளிட்டவை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி நெட் தேர்வு கணினி அடிப்படையிலான முறையில் நடத்தப்படும். இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் (UGC NET 2022 Notification) மட்டுமே நிரப்ப வேண்டும்.

    UGC NET 2022 விண்ணப்ப கட்டணம் :



















    பொதுப் பிரிவுரூ. 1100
    பொது-EWS/ OBCரூ.500
    SC, ST, PWD, திருநங்கைகள்ரூ 275
    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி30 மே 2022 . (கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது )

    UGC NET 2022 விண்ணப்பிப்பது எப்படி ?

    UGC NET தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ugcnet.nta.nic.in பக்கத்திற்குச் செல்லவும்.

    முகப்புப் பக்கத்தின் கீழே, UGC NET 2021 மற்றும் 2022 பதிவுக்கான இணைப்பு காட்டப்படும். நீங்கள் அதை கிளிக் செய்ய வேண்டும்.

    (Correction Window of Online Application Form for UGC-NET Dec. 2021 & June 2022 (merged cycles)



    அடுத்ததாக ஒரு பக்கம் தோன்றும். அதில் விவரங்களைப் பூர்த்தி செய்து கடவுச்சொல்லை உருவாக்கவும். UGC NET-க்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

    இறுதியாக ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றவும்.

    அதன் பிறகு கட்டணம் செலுத்தி சரிபார்த்து ஆன்லைனில் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Education

    அடுத்த செய்தி