Home /News /education /

யுஜிசி-நெட் 2020 முடிவுகள் வெளியீடு

யுஜிசி-நெட் 2020 முடிவுகள் வெளியீடு

மாதிரி படம்

மாதிரி படம்

தேர்வு எழுதியவர்கள் இப்போது தங்கள் யுஜிசி நெட் 2020 ஸ்கோர் கார்டை தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம்.

  • News18
  • Last Updated :
    யுஜிசி-நெட் 2020 முடிவுகளை தேசிய சோதனை நிறுவனம் (என்.டி.ஏ) வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை நடத்தப்பட்ட யுஜிசி நெட் 2020 ஜூன் தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. யுஜிசி நெட் 2020 ஜூன் தேர்வில் பங்கேற்றவர்கள் தங்கள் முடிவுகளை ugcnet.nta.nic.in என்ற இணையத்தில் பார்க்கலாம்.

    தேர்வு எழுதியவர்கள் இப்போது தங்கள் யுஜிசி நெட் 2020 ஸ்கோர் கார்டை தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் வகை வாரியாக கட்ஃஆப் மதிப்பெண்களையும் என்.டி.ஏ வெளியிட்டுள்ளது. நேற்று, யுஜிசி-நெட் 2020 இறுதி ஆன்சர் கீயை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    யுஜிசி நெட் 2020 முடிவுகளை எவ்வாறு சரிபார்ப்பது?

    ugcnet.nta.nic.in இணையத்தை பார்வையிடவும்

    யுஜிசி-நெட் ஜூன் 2020 என்.டி.ஏ ஸ்கோருக்கான இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

    விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின் ஆகியவற்றை உள்ளிடவும்.

    உங்கள் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

    அதில் ப்ரின்ட் என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் மதிப்பெண் அட்டையை ப்ரின்டவுட் எடுத்துக்கொள்ளலாம்.

    நேற்று(நவ.30) இறுதி ஆன்சர் கீயை வெளியிட்ட என்.டி.ஏ ஒரு அறிவிப்பில் தெரிவித்ததாவது, “சவால்களை கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னர் தயாரிக்கப்பட்ட 81 நெட் பாடங்களுக்கான (02 ஷிப்ட்களில் ஆங்கிலம், வர்த்தகம் மற்றும் இந்தி) இறுதி ஆன்சர் கீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட நிபுணர்களின் ஆய்வு மற்றும் தீர்மானம் இப்போது ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் கிடைக்கிறது " என தெரிவித்திருந்தது. 

    Also read... அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்த முடிவுகளுக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்



    மேலும் தற்காலிக ஆன்சர் கீ நவம்பர் 17ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. வழக்கமாக, இறுதி ஆன்சர் கீயை வெளியிட்ட நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குப் பிறகு என்.டி.ஏ முடிவுகளை அறிவிக்கும். ஆனால், இந்த முறை, யுஜிசி-நெட் 2020 முடிவுகள் இறுதி ஆன்சர் கீ வெளியிடப்பட்ட ஒரு நாள் கழித்து வெளியிட்டுள்ளது. என்.டி.ஏ யுஜிசி நெட் 2020 கணினி அடிப்படையிலான முறையில் நடைபெற்றது. 8.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். 

    பதிவுசெய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களில், 5,26,707 பேர் யுஜிசி நெட் 2020-ஐ எழுதினர். இந்த தேர்வு ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, தேர்வு நான்கு அல்லது ஐந்து நாட்களில் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேர்வு மையங்களில் வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைத்தால் இந்த தேர்வு ஒரு மாதத்திற்கு மேலாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    அடுத்த செய்தி