மாணவியரின் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விரைவில் முதலாமாண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.இந்நிலையில் உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என்றும், பாலியல் புகார்கள் உள்ளிட்ட புகார்களை விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும், அதில் தாமதம் கூடாது என்றும், தனி கமிட்டியின் விவரங்களை UGC-யிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அதை செயல்படுத்தவில்லை என்று UGC-க்கு புகார் வந்ததன் காரணமாக மீண்டும் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அன்மை காலங்களாக பாலியல் புகார்கள் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதன் காரணமாக கல்வி வளாகங்களில் கற்றல் பணிகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு மாணவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இவற்றை தடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் புகார்களை பெறப்பட்டவுடன் அதற்கு உரிய தனி அமைப்பு விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இதற்காகவே தனி கமிட்டி அமைக்க வேண்டும் என்கிற உத்தரவை நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.