சுவயம் ஆன்லைன் கற்றல் நிகழ்ச்சிகளை ஊக்குவிக்குமாறு உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு கடிதம் எழுதியுள்ளது.
ஒரு செமஸ்டரில் வழங்கப்படும் ஒட்டுமொத்த பாடநெறியில் 40% பாடங்கள் ஆன்லைன் இணையதளமான SWAYAM மூலம் வழங்க வழிவகை செய்யும் ஒழுங்குமுறையை (Credit Transfer for Online Learning Course through Swayam) பல்கலைக்கழக மானியக் குழு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
2017ல் தொடங்கப்பட்டதில் இருந்து, 7,115 பாடநெறிகள் சுவயம் மூலம் கற்பிக்கப்படுகிறது. சுமார் 2.72 கோடி பேர் சுவயம் தளத்தின் பல்வேறு படிப்புகளுக்கு பதிவு செய்துள்ளனர். 11.13 லட்சம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் தளத்தின் பயன்பாடு அதிகரித்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சுவயம் தளத்தின் பயன்பாடு குறித்து மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்ட இணையதள கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 70 %க்கும் (10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள்) மேற்பட்டவர்கள் சுவயம் தளத்தில் ஈட்டப்பட்ட தரமதிப்பீடுகளை (Credits) கணக்கில் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் பல்வேறு பாடநெறிகளில் சான்றிதழ் பெறுவதற்கான வாய்ப்பை இந்த தளம் வழங்கி வருகிறது. நெகிழ்வுத் தன்மை மிக்க மற்றும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் கல்வி முறையாகவும் இது உள்ளது.
எனவே, SWAYAM ஆன்லைன் கற்றல் நிகழ்ச்சிகளை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ஊக்குவிக்க வேண்டும். SWAYAM மூலம் வழங்கப்படும் ஆன்லைன் படிப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
SWAYAM (Study Webs of Active Learning for Young Aspiring Minds)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education