Home /News /education /

அக்.31க்குள் கல்லூரிகளில் இருந்து வெளியேறினால் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தை திருப்பித் தர வேண்டும்: யுஜிசி

அக்.31க்குள் கல்லூரிகளில் இருந்து வெளியேறினால் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தை திருப்பித் தர வேண்டும்: யுஜிசி

காட்சிப் படம்

காட்சிப் படம்

CUET, JEE Main, JEE Advanced, JEE Main உள்ளிட்ட  பொது நுழைவுத் தேர்வுகள் கால தாமாதமாக  தொடங்கப்பட்டதால் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் வரை நடைபெறும் எனத் தெரிகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    2022 -23 கல்வியாண்டில், அக்டோபர் 31ம் தேதிக்கு முன்பாக, வேறு கல்லூரிகளுக்கு நகரும் மாணவர்களின் முழுக் கல்லூரி கட்டணத்தையும் உயர்கல்வி நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

    கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை, கட்டணம் தொடர்பான வழிமுறைகளை  பல்கலைக்கழக மானியக் குழு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. முன்னதாக, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியைக் கருத்தில் கொண்டு, இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு  அறிவுரை வழங்கியது.

    இந்நிலையில், 2022-23 கல்வியாண்டிற்கான கல்லூரி கல்வி கட்டணம் திருப்பி செலுத்துதல் தொடர்பான அறிவிப்பை யுஜிசி வழங்கியுள்ளது. Fund Refund Policy 2022-23 என்ற இந்த அறிவிப்பு,  யூஜிசியின் அதிகாரப்பூர்வ  முகவரியில் உள்ளது.

    அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாது, " 2021 ஜுலை 16ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா நோய்த் தொற்று பரவலால் உயர்கல்வி  சேர்க்கையை ரத்து செய்த (அ) வேறு நிறுவனங்களுக்கு நகர்ந்த மாணவர்களின் முழுக்  கல்லூரி கட்டணமும் திருப்பிச் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

    2022, ஜுலை 15ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அடிப்படையில் இளநிலை மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்போது, CUET, JEE Main, JEE Advanced, JEE Main உள்ளிட்ட  பொது நுழைவுத் தேர்வுகள் கால தாமாதமாக  தொடங்கப்பட்டதால் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் வரை நடைபெறும் எனத் தெரிகிறது.

    இதையும் வாசிக்க: ஜேஇஇ 2வது அமர்வு முதன்மைத் தேர்வு முடிவுகள் எப்போது?

    மேற்படி நிலைகளை கருதியும், பெற்றோரின் பொருளாதார  சுமைகளை கருத்தில் கொண்டும்,  அக்டோபர் மாதம் வரை சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கும், வேறு நிறுவனங்களுக்கு நகரும் மாணவர்களுக்கும் முழுக்  கல்லூரி கட்டணமும் திருப்பிச் செலுத்த வேண்டும். அதற்கு பின், டிசம்பர் 31ம் தேதி வரை சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு, சேர்க்கை நிதியாக 10% வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். இதர கட்டணங்கள் அனைத்தும் திருப்பி தரப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: College Admission, UGC

    அடுத்த செய்தி