Home /News /education /

தொழில்துறை நிபுணர்களுக்கு பேராசிரியர் பணி - யுஜிசி முடிவு

தொழில்துறை நிபுணர்களுக்கு பேராசிரியர் பணி - யுஜிசி முடிவு

யுஜிசி

யுஜிசி

திறன் அடிப்படையிலான கல்வியில் கவனம் செலுத்தும் விதமாகக் கொண்டு வரப்பட்ட இந்த வரைவு வழிகாட்டுதலுக்கு பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • New Delhi, India
    பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி ஆசிரியர்களாக தொழில்துறை நிபுணர்களை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

    புதிய கல்விக் கொள்கை அமலாக்கத்தின் ஒரு அங்கமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி பேராசிரியர்கள் பதவிகளின் கீழ் தொழில் வல்லுநர்களை நியமிக்கும் விதமாக உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் புதிய வரைவு வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது.

    திறன் அடிப்படையிலான கல்வியில் கவனம் செலுத்தும் விதமாகக் கொண்டு வரப்பட்ட இந்த வரைவு வழிகாட்டுதலுக்கு பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பயிற்சி பேராசிரியர்கள் நியமனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட வரைவு வழிகாட்டுதல்களின்படி, பொறியியல், அறிவியல், ஊடகம், இலக்கியம், தொழில்முனைவு, சமூக அறிவியல், சிவில் சர்வீசஸ் மற்றும் ஆயுதப்படை போன்ற துறைகளில், குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சேவை அல்லது அனுபவம் கொண்ட வல்லுநர்கள் பணியமர்த்தப்படுவதற்கு தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர்.

    ALSO READ | TNPSC குரூப் 1 தேர்வு: 92 காலியிடங்களுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்

    ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பயிற்சி பேராசிரியரின் அதிகபட்ச பணிக்காலம் நான்கு ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்கள் தரப்பில் இருந்து புகழ்பெற்ற நிபுணர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் இரண்டு மூத்த பேராசிரியர்கள் மற்றும் ஒரு சிறந்த வெளி உறுப்பினர் கொண்ட தேர்வுக்குழு விண்ணபங்களை பரிசீலித்த பிறகு அதன் அடிப்படையில் நிறுவனங்கள் சட்டப்பூர்வ அமைப்புகள் மூலம் முடிவெடுக்கும் என்றும் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பதவிக்கு முறையான கல்வித் தகுதி அவசியமாகக் கருதப்படாது. இதுகுறித்த அறிவிக்கை அடுத்த மாதம் வெளியாகும் என்றும், 10 சதவீத ஆசிரியர் பணியிடங்களுக்கு நிபுணர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: UGC

    அடுத்த செய்தி