• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • 2018-2019ம் ஆண்டுக்கான பி.எட் மாணவர் சேர்க்கை ரத்து - தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

2018-2019ம் ஆண்டுக்கான பி.எட் மாணவர் சேர்க்கை ரத்து - தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

யூஜிசி

யூஜிசி

2018-2019ம் ஆண்டு நடைபெற்ற பி.எட் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

  • Share this:
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் பி.எட் பட்டப்படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. பி.எட் பட்டப்படிப்பு ஓராண்டு படிப்பாக இருந்தவரை, தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இதற்கான அங்கீகாரத்தை வழங்கி வந்தது. தற்போது பி.எட் படிப்பு 2 ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளதால் அதற்கான அங்கீகாரத்தை யு.ஜி.சி வழங்குகிறது.

இந்த நிலையில் தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் அங்கீகாரத்தை மட்டும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பெற்றிருந்ததால், தற்போது 2018-2019 ஆண்டு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பி.எட் மாணவர் சேர்க்கையினை ரத்து செய்ய  யு.ஜி.சி உத்தரவிட்டது.

 

இதனை தொடர்ந்து 2118-19ம் ஆண்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Also read... பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீட்டில் சிக்கல் - பொறியியல் கலந்தாய்வு தாமதம்

இதனையடுத்து மாணவர்கள் செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 400-க்கும் அதிகமானோர் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்பில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: