UGC APPROVES 2ND YEAR B ED DEGREE IN TAMIL NADU OPEN UNIVERSITY VAI
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட்., பட்டப்படிப்பு: யுஜிசி அனுமதி
யூஜிசி
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட்., பட்டப்படிப்பிற்கு பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் தேசிய ஆசிரியர் பயிற்சி குழுமம் அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (NCTE) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இரண்டாண்டு B.Ed., படிப்புகளுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அப்படிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள அறிவிப்பில், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் வரையிலும் மே மாதத்தில் வகுப்புகள் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ் வழியில் 500 மாணவர்கள், ஆங்கில வழியில் 500 மாணவர்கள் என மொத்தம் ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.