முகப்பு /செய்தி /கல்வி / ஒரு நாளைக்கு ரூ.20-ல் உயர்கல்வி : யுஜிசி அதிரடி

ஒரு நாளைக்கு ரூ.20-ல் உயர்கல்வி : யுஜிசி அதிரடி

காட்சிப் படம்

காட்சிப் படம்

நாடு முழுவதும் உள்ள  4  லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்களின் கட்டமைப்புகளை பயனப்டுத்த பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்துள்ளது

  • Last Updated :

புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்து இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, பல்வேறு முன்னெடுப்புத் திட்டங்களை பல்கலைக்கழக மானியக் குழு இன்று அறிவிக்க இருக்கிறது.

அதில் ஒரு பகுதியாக, கற்றல் அணுகல் இல்லாத  விளிம்புநிலையிலுள்ள மாணவர்களுக்கும் உயர்கல்வி பாடங்களை கொண்டு செல்வதற்கான ஒற்றை போர்டல் வசதியை இன்று தொடங்க இருக்கிறது. இந்த ஆன்லைன் போரட்டலில் பெருந்தரவு (Big data), எந்திரவழிக் கற்றல் (Machine Learning), செயற்கை நுண்ணறிவு (Artifical Intelligence), இணைய பாதுகாப்பு (Cyber Security) உள்ளிட்ட 20,000க்கும்  மேற்பட்ட பாடநெறிகள்  இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.

இணைய வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் பலனடையும் வகையில், நாடு முழுவதும் உள்ள  4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்களின் கட்டமைப்புகளை பயன்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்துள்ளது.

இந்த போர்டல் அணுகல் சேவைகள்  வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவும்,  மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் கையெழுத்திட உள்ளன.

நாடு முழுவதும் உள்ள 2.50 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் குறைந்தபட்சம் ஒரு பொது சேவை மையத்தை அமைப்பதற்கும், அரசு மற்றும் மக்கள் சார்ந்த பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்குவதையும் பொது சேவை மைய திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கிராம அளவிலான தொழில்முனைவோரால் (village level Entrepenur) இது நடத்தப்படுகிறது.

28 பிப்ரவரி 2022 நிலவரப்படி, நாடு முழுவதும் 4,63,705 பொது சேவை மையங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக நான்கு நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் வாசிக்க: SWAYAM தளத்தின் மூலம் ஆன்லைன் பாடங்களை ஊக்குவிக்க வேண்டும்: யுஜிசி அறிவுரை

top videos

    இந்த திட்டத்தின் மூலம், 23,000 முதுகலை பாடநெறிகள், உலகின் அறிவித் தளத்தில் விரைவான மாற்றங்கள் ஏற்படுத்தி வரும் 137 ஸ்வயம் இணைய வழி பாட நெறிகள், பொறியியல் அல்லாத 25 ஸ்வயம் பாடநெறிகள் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. எவ்வாறாயினும், பொது சேவை மையங்கள் மூலம் அணுகல் பெறும் மாணவர்கள் நாளொன்றுக்கு ரூ.20 கட்டணமாக செலுத்த வேண்டும்.

    First published:

    Tags: UGC