Home /News /education /

கேம்பஸ் இன்டர்வியூவில் ரூ.1.02 கோடி சம்பளத்துடன் வேலை.. VIT கல்லூரி மாணவர்கள் இருவர் அசத்தல்

கேம்பஸ் இன்டர்வியூவில் ரூ.1.02 கோடி சம்பளத்துடன் வேலை.. VIT கல்லூரி மாணவர்கள் இருவர் அசத்தல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இதுவரை VIT இல் படிக்கும் 184 மாணவர்கள் இன்டர்ன்ஷிப் மூலமாகவே ப்ரீ பிளேஸ்மென்ட் ஆஃபர்களை பெற்றுள்ளனர்.

    வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் இறுதி ஆண்டு படித்துவரும் மாணவர்களுக்கான கேம்பஸ் இன்டர்வீயூ ஜூலை 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற முடிந்தது. இதில் அங்கு படித்து வரும் இரு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1.02 கோடி சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது. முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான விஐடி கல்லூரியின் 2023ஆம் ஆண்டு பட்டம்பெறும் பேட்ச் மாணவர்களுக்கு கேம்ப்ஸ் இன்டர்வியூ இம்மாதம் நடைபெற்றது. கல்வி நிறுவனத்தின் நான்கு கேம்பஸ்களான வேலூர், சென்னை, அமராவதி, போபால் ஆகிய நான்கு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் இதில் பங்கேற்றனர்.

    முதல் கட்டமாக ஸ்லாட்-1 கம்பேனிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. மைக்ரோசாப்ட், டிஇ ஷா, மார்கன் ஸ்டான்லி, ஏர்பிஎன்பி மற்றும் மீடியா.நெட் ஆகிய நிறுவனங்கள் இதிவ் கலந்து கொண்டன. ஸ்லாட்-1 நிறுவனங்கள் ஆன்லைன் தேர்வு, டெக்னிக்கல் தேர்வு, எச்ஆர் நேர்காணல் ஆகிய முறைகளில் இந்த இன்டர்வீயூவை நடத்தின. நேரடி மற்றும் ஆன்லைன் ஆகிய இரு முறைகளையும் கலந்து இந்த நேர்காணல் நடைபெற்றன. இந்த ஸ்லாட்-1 தேர்வில் மைக்ரோசாப்ட நிறுவனம் 45 மாணவர்களை வேலைக்கு எடுத்துள்ளன. அதேபோல்,டிஇ ஷா 2 பேர், மார்கன் ஸ்டான்லி 3 பேர், ஏர்பிஎன்பி 4 பேர், மீடியா.நெட் - ஒருவர் ஆகியோருக்கு வேலை வழங்கியுள்ளன.

    இதில் உச்சபட்சமாக, மோட்டர்க்யூ என்ற நிறுவனம் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களான அமித் அகர்வால், சர்தக் பரத்வாஜ் ஆகிய இருவரை ஆண்டு சம்பளம் ரூ.1.02 கோடி வழங்க ஆஃபர் தந்து வேலைக்கு எடுத்துள்ளது. கார் டேட்ட மற்றும் அனலைட்டிக் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமான இதில் மாணவர்கள் இருவரும் படிக்கும் போதே இன்டர்ன்ஷிப் செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: IBPS : ஐபிபிஎஸ் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி - தமிழக அரசு

    அத்துடன் 184 மாணவர்கள் இன்டர்ன்ஷிப் மூலமாகவே ப்ரீ பிளேஸ்மென்ட் ஆஃபர்களை பெற்றுள்ளனர். அமேசான், வெல்ஸ் பார்கோ, டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், வால்மார்ட் லேப்ஸ், சிலிக்கான் லேப்ஸ், மீஷோ ஆகிய நிறுவனங்கள் அடுத்து வேலைக்கு நேர்காணல் செய்யவுள்ளன.சுமார் 175 மாணவர்கள் ரூ.10 லட்சம் ஆண்டு சம்பளத்துடன் ப்ளேஸ்மென்ட் ஆஃபர்களை வழங்கவுள்ளன.இந்த கேம்பஸ் இன்டர்வீயூ ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Campus interview, Jobs

    அடுத்த செய்தி