அண்ணா பல்கலை. வினாத்தாள் லீக் - பொறியியல் மாணவர் & பட்டதாரி கைது

கணித தேர்வில் தோல்வி அடைந்த ஹரிகிருஷ்ணன் சுரேஷ்குமாரின் உதவியுடன், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றும் அவரின் உறவினர் மூலம் வினாத்தாளை பெற்றுள்ளார்.

அண்ணா பல்கலை. வினாத்தாள் லீக் - பொறியியல் மாணவர் & பட்டதாரி கைது
அண்ணா பல்கலைக் கழகம்
  • News18
  • Last Updated: December 20, 2018, 6:59 AM IST
  • Share this:
அண்ணா பல்கலைக்கழகத்தில் கணித வினாத்தாள் வெளியானது தொடர்பாக கல்லூரி மாணவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு இரண்டாம் பருவத்திற்கான கணிதத்தேர்வு கடந்த 3-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் முன்கூட்டியே வினாத்தாள் வெளியானதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டாளர் வெங்கடேசன் கடந்த 7-ம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த ஹரிகிருஷ்ணன் என்பவரும், பொறியியல் பட்டதாரியான சுரேஷ்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கணித தேர்வில் தோல்வி அடைந்த ஹரிகிருஷ்ணன் சுரேஷ்குமாரின் உதவியுடன், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றும் அவரின் உறவினர் மூலம் வினாத்தாளை பெற்றுள்ளார்.

அந்த வினாத்தாளை தமது நண்பர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் ஹரிகிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் சுரேஷ்குமாரின் உறவினரை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

Also read... செமஸ்டர் வினாத்தாள் வெளியானதா? அண்ணா பல்கலை. விசாரணைAlso read... முன்கூட்டியே வெளியான வினாத்தாள்: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து!

Also see...

First published: December 20, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்